SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈஸியாக வாங்கலாம் சென்டம்...

2015-03-10@ 10:15:46

சில மாணவர்களுக்கு புத்தகத்தை எடுத்து கையில் வைத்த ஐந்தாவது நிமிடம் தன்னையும் அறியாமல் எதை எதையோ கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். தறிகெட்டு ஓடும் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க ஒரு எளிய வழி, படிக்கும் நேரத்தில் மெல்ல முணுமுணுத்தபடி படிப்பது. இதன் மூலம் கற்பனை ஏற்படும்போது நாம் வாய்விட்டு படிப்பது நின்றுவிடும்.

பக்கத்தில் இருப்பவர்கள் நினைவூட்ட, சீக்கிரம் பாடத்தை படிக்க துவங்கிவிடுவோம். சாப்பிட, குளிக்க, உறங்க என நமது உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் செயலையும் அதற்கேற்ற நிலையில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே, நீண்ட நேரம் படிக்கவேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள். சாய்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ படிக்க வேண்டாம்.

உதாரணத்திற்கு மூன்று மணிநேரம் படிப்பது என்றும் அதில் இந்த பாடத்திற்கு இவ்வளவு நேரம் என்றும் முடிவுசெய்து படிக்க உட்கார்ந்திருப்பீர்கள். முதல் அரை மணி நேரத்திலேயே முதல் பாடம் சற்றே கடினமாக இருக்க, முதலில் கெமிஸ்ட்ரி படிப்போம் என்று மனம் அந்த பாடத்திலிருந்து தப்பிக்க நினைக்கும். சரி என்று கெமிஸ்ட்ரியை எடுத்து படித்தால், அதுவும் கொஞ்சம் நேரத்தில் போரடிக்க, அடுத்த சப்ஜெட்டிற்கு மனம் தாவும், கடைசியில் பார்த்தால் படித்த திருப்தியே இருக்காது.

இதை தவிர்க்க, எப்படி திட்டமிட்டீர்களோ, அப்படியே படிப்பது என்று உறுதியாக இருங்கள். புரிகிறதோ, இல்லையோ திட்டமிட்ட நேரம் வரை படியுங்கள். இதன்மூலம் மெல்ல மெல்ல அந்த பாடத்தில் மனம் ஒருமுகப்பட ஆரம்பிக்கும். சில மாணவர்களுக்கு புத்தகத்தில் சில சப்ஜெக்ட் பிடிக்காது. அதாவது, தனக்கு இந்தப்பாடம் வராது என்று முடிவு செய்துவிடுவார்கள். உங்களுக்கு பிடிக்காத சப்ஜெக்ட் கணிதம் எனில், அந்த நோட்டு மீது அட்டை போட்டு, அதன் மேல் 'ஐ லைக் மேத்ஸ்' என்று எழுதி வைக்கலாம்.

எப்போது மேத்ஸ் புக் எடுத்தாலும் எனக்கு பிடித்த சப்ஜெக்ட் மேத்ஸ் என்று ஒரு சில நிமிடங்கள் கற்பனை செய்யுங்கள். எல்லா கணக்குகளும் உங்களுக்கு சுலபமாக புரிவதை போலவும், எல்லா ஸ்டெப்பும் சுலபமாக உங்களுக்கு வருவது போலவும் பாவனை செய்யுங்கள். சில நாட்களுக்கு பிறகு பாருங்கள் உண்மையிலேயே கணிதத்தின் மேல் உங்களுக்கு காதல் வந்திருக்கும்.

சில மாணவர்கள் முதலில் கடினமான பாடத்தை படித்து முடித்துவிடுவார்கள். அந்த உற்சாகத்திலேயே மற்ற பாடத்தை முடித்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். இன்னும் சிலர் எளிதான பாடத்தை வேகமாக படித்த திருப்தியிலேயே பிறகு கடினமான பாடத்தையும் எளிதில் படித்து விடுவார்கள். இந்த இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை கடைபிடியுங்கள் கடினமும் எளிதாகும். 100க்கு 100ம் ஈஸியாகும்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
walgreens promo read free pharmacy discount cards
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்