SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற எளிய வழி

2015-03-05@ 15:20:21

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கி 23ம் தேதி முடிகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகிறது. இன்றைய சமூக சூழல் ஒரு மாணவனின் திறன்களை அவன் எடுக்கும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது.மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிடப்போகும் பணத்தை அவன் தந்தையோ, தாயோ படப்போகும் சிரமத்தை தீர்மானிக்கிறது. இந்த நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பதற்றப்படாமல் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம்

தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களை இலக்கணப்பிழை இல்லாமல் எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? மனப்பாடம் செய்வதை விட புரிந்து படித்தல் மற்றும் எழுத்து பயிற்சி வேண்டும்.

கணக்கு

கணக்கில் உள்ள பார்முலாக்களை எழுதிவைத்து மனப்பாடம் செய்யுங்கள். அதற்கென்று தனி நோட்டு போடுங்கள். கணக்குகளை எழுதி பயிற்சி செய்யுங்கள். முதலில் தவறானாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இது நம் வாழ்க்கையை தீர்மானிக்க போகும் ஒரு களம் என்பதை மனதில் வைத்து தொடர்ந்து முயற்சிக்கும்போது பதில் வந்தே தீரும்.

அறிவியல்

அறிவியல் பாடங்களில் வரும் விதிகள், சமன்பாடுகள் போன்றவற்றை நம் சொந்த வார்த்தையில் எழுதக்கூடாது. மாறாக புத்தகத்தில் உள்ளதுபோல் மனப்பாடம் செய்து அப்படியே எழுத வேண்டும். மற்ற கேள்விகளை பொருளையும், பெயரையும் மாற்றாமல் உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதவும். ஒரு பக்க பதிலை கால் பக்கத்திற்கு குறைவாக இருப்பது போல் முக்கிய வார்த்தைகளை வைத்து குறிப்பு எடுத்து கொள்ளவும். இது பரீட்சைக்கு படிக்கும் இறுதி நேரத்தில் உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும். படங்களை அழகாக பாகங்கள் குறித்து வரைந்து பழகவும்.

சமூக அறிவியல்

சமூக அறிவியல் பாடங்களில் உள்ள ஆண்டுகளையும், நாடுகள் மற்றும் முக்கியமானவர்களையும் நினைவில் வைக்கவும். ஒரு தனி நோட்டு போட்டு அவற்றை எழுதி பாருங்கள்.

தேர்வு எழுதும்போது கவனிக்க வேண்டியவை:

மாணவர்களே பொதுத்தேர்வு எழுத செல்லும்போது விரைவாக வீட்டிலிருந்து கிளம்புங்கள். பள்ளிக்கு சென்ற பின் மற்ற மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன், கேள்வி மற்றும் பதில்களை பற்றி கலந்து ஆலோசிக்காமல் நேராக தேர்வு எழுதும் அறைக்கு செல்லவும். ஏனெனில் அவர்கள் நாம் படிக்காத கேள்விகளை விவாதிக்கும்போது அது நம்மை பலவீனப்படுத்தி நம்பிக்கை இழக்க வைக்கும்.தேர்வு அறைக்குள் நுழையும் முன் சட்டை, பேன்ட் பாக்கெட் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து தேவையற்ற பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை மட்டும் எடுத்து செல்ல வேண்டும்.நீங்கள் தேர்வு எழுதும் நாற்காலி மற்றும் மேஜையில் ஏதாவது எழுதியிருந்தால் அதனை தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்களை அழைத்து அழித்து விடுங்கள். தேர்வு கண்காணிப்பாளரிடம் உங்களது சந்தேகத்தை கேட்டுக்கொள்ளலாம்.
வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளர் கொடுத்தவுடன் பதட்டப்படாமல் கவனமாக படிக்க வேண்டும். தெரியாத வினாக்கள் முதலில் வந்தால் மனம் தளராது தொடர்ந்து படிக்கவும். தேர்வு எழுதும் விடைத்தாளில் எந்தவித அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதவேண்டும். குறிப்பாக தேர்வு எழுதும்போது நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

முதலில் பெருவினா, சிறுவினா, குறுவினா என்ற அடிப்படையில் வினாக்களை எழுதவும். முதலில் தெரிந்த வினாக்களுக்கும், பின் ஓரளவு தெரிந்த வினாக்களுக்கும், இறுதியாக பதில் தெரியாத வினாக்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதவும். ஒரு வினாவையும் விடாமல் அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத வேண்டும்.பதில்களை இடைவிடாமல் தொடர்ந்து எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதி முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு காட்டவும். சமன்பாடு, சூத்திரம் போன்றவற்றை கட்டம் போட்டு காட்டவும். தேவையான படங்களை விடை அருகிலேயே அழகாக வரையவும்.
விடைகளை அடிக்கோடிடும்போது பல நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். கருப்பு, நீல நிற பேனாக்கள் மற்றும் பென்சில்களை பயன்படுத்துவதே நல்லது. விரைவில் தேர்வு எழுதி முடித்தால் விடைத்தாளை உடனே கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல் மீண்டும் ஒரு முறை விடை, கேள்வி எண், பதிவு எண் போன்றவற்றை சரிபார்த்த பின் விடைத்தாளை கொடுக்கவும்.ஒவ்வொரு வார்த்தைக்கும், வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும். ஒரு பதிலில் உள்ள முக்கியமான கருத்துக்களை அடிக்கோடிட்டு காட்டவும்.எவ்வாறு கேள்வி தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதை போலவே கடைசி வினாடி வரை எழுதக்கூடாது.குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்துவிட்டு ஒவ்வொரு பதிலுக்கும் கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பார்க்கவும். இது மிகவும் முக்கியம். தேர்வு எழுதும்போது பதில்களை அடித்து கிறுக்கி எழுதாமல் கவனமாக, தெளிவாக எழுதி மதிப்பெண்களை வெல்லுங்கள்.

drug coupon card prescription coupons drug discount coupons
sinemet go sinemet
abilify and coke link abilify and coke


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்