SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்லா விளையாடினா, நல்லா படிப்பாங்க...

2015-03-05@ 10:23:58

எப்போதும் துறுதுறுவெனவிளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. விளையாடிக்கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும் எப்போது துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்றும் புலம்பும் பெற்றோர்கள் பலர் உண்டு. அப்படியானால் இந்த ஆராய்ச்சி பெற்றோர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவெர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர்.இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்க வைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதாவது அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளை கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வி திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் சோம்பியாக உட்கார்ந்திருக்கும் குழந்தைகளை விட கல்வித் திறனில் சிறந்து விளங்குவார்கள். ஏனெனில் விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகபடியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-09-2019

    இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்