SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலையில் விழுந்த தொழிலதிபர்கள் : 5வது திருமணம் செய்ய முயன்ற ‘கல்யாண ராணி’ சிக்கியது எப்படி?

2015-02-27@ 01:36:52

சென்னை: பல ஆண்களை வசீகர பேச்சால் ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்த ‘கல்யாண ராணி‘ 5வது திருமணத்துக்கு முயன்றபோது போலீசில் சிக்கினார். தொழிலதிபர்களை அவர் வலை யில் வீழ்த்திய திடுக்கிடும் தகவல்களும் அம்பலமாகி உள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு டிவிஎஸ் அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன் (38). வீடு, அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார். கடந்த நவம்பர் மாதம் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை சீனிவாசன், இணையதளத்தில் பார்த்தார். அதில், மணமகளின் பெயர், கோவையை சேர்ந்த காயத்ரி (30), பிஎஸ்சி பட்டதாரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே, அதிலிருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு சீனிவாசன் பேசினார். அப்போது ‘தனக்கு தாய், தந்தை இல்லை. அதிக கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். வரதட்சணை கொடுக்க முடியாது‘ என காயத்ரி கூறியுள்ளார். மேலும் அவரது பேச்சு ஆண்களை இழுக்கும் அளவுக்கு வசீகரமாக இருந்துள்ளது. இதனால் பேச்சில் மயங்கிய சீனிவாசன், கடனை தானே அடைத்து, வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்வதாக சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.

அதன்படி, இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் காயத்ரியின் நடவடிக்கையில் சீனிவாசனுக்கு சந்தேகம் எழுந்தது. சில தினங்களுக்கு முன் காயத்ரியின் செல்போனை பார்த்தபோது அதில், ஏராளமான ஆண்களின் செல்போன் எண்கள் இருந்தன. உடனே சீனிவாசன் அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டபோது, காயத்ரிக்கு ஏற்கனவே பலருடன் திருமணம் நடந்தது தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து செய்வது அறியாது திகைத்தார். இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில், சீனிவாசன் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி வழக்குப்பதிவு செய்து, காயத்ரியிடம் விசாரித்தார். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயத்ரிக்கு கடந்த 2010ம் ஆண்டு தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் நரசிம்மராவ் (40), என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில தினங்களில், அவரை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு பிரிந்து விட்டார். பின்னர் 2012ல் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் (35) என்பவரை திருமணம் செய்துள்ளார். அவரிடம் இருந்தும் நகை, பணத்தை பறித்துக்கொண்டு காயத்ரி விவாகரத்து பெற்றுள்ளார்.

இதையடுத்து, 2013ல் மாம்பலத்தை சேர்ந்த கோயில் பூசாரி ராஜகோபால் (33) என்பவரை திருமணம் செய்துள்ளார். வழக்கம்போல் அவரிடம் இருந்த நகை, பணத்தை பெற்றுக்கொண்டதும் பிரிந்து சென்றுவிட்டார். அடுத்ததாக, சீனிவாசனை திருமணம் செய்துவிட்டார். திருமணம் முடிந்த பிறகு கணவன்களிடம், வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும் தனக்கு கொடுத்தால்தான், தாம்பத்திய உறவுக்கு வருவேன் என கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி நகைகளையும், பணத்தையும் கொடுத்துள்ளனர். பின்னர், நகைகளை அபேஸ் செய்துவிட்டு, கணவன்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

கடைசியாக சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட பிறகு, அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவருடன் காயத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாலாஜிக்கும், காயத்ரிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன. காயத்ரி குறித்த உண்மையை பாலாஜியின் குடும்பத்துக்கு, போலீசார் நேற்று தெரிவித்தனர். இதை கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல, பல ஆண்களை ஏமாற்றி காயத்ரி திருமணம் செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இணைய தளத்தில் பல பெயர்கள் பதிவு

காயத்ரி இணைய தளத்தில் சிந்து, சவுந்தரவள்ளி, சுபிக்தா உள்பட பல பெயர்களிலும், வயதையும் குறைத்து தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதை நம்பி ஏராளமான ஆண்கள், அவரை தொடர்பு கொண்டு பேசும்போது, வசீகரமாக பேசி அவர்களை வலையில் சிக்க வைத்துள்ளார். முக்கியமாக காயத்ரி, தனது சாதியினரை மட்டுமே ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

sinemet go sinemet
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்