SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்வு பயமா?

2015-02-23@ 10:21:08

பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இது 'ஸ்டடி ஹாலிடேஸ்' நேரம். ஒவ்வொரு மணித்துளியையும் பொன்னாக செலவளிக்கும் நேரம். துளி டென்சனும் வேண்டாம். என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், மாணவர்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். இந்தத் தேர்வை எதிர்கொண்டு விரும்பிய மதிப்பெண் பெறுவதற்கு ஆலோசனைகள் இதோ.....

சாப்பாடு, தூக்கம் மற்றும் ஓய்வு மூன்றையும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வழக்கப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் படிப்பது, இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ், படித்ததை நினைவுக்கு கொண்டு வர எழுதிப் பார்ப்பதும் தவறுகளை திருத்திக் கொள்ள கை கொடுக்கும்.

பாடம் மற்றும் நேரத்தின் அடிப்டையில் படித்து முடிப்பதற்கான அட்டவணை இடுங்கள். குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் நம்பிச் செல்ல வேண்டாம். அனைத்து பாடங்களையும் ஒரு முறை படித்து விடவும்.

நினைவில் கொள்ள வேண்டியதை சிறு குறிப்புக்கு மாற்றி விடுங்கள். படிததை படங்கள்.. வண்ணங்கள்... வார்த்தைகள் கொண்ட மைண்ட் மேப்பாக வடிவமைக்கலாம்.

தொடர்ந்து படிக்கும் போது 'ரீபிரெஷ்' செய்து கொள்ள அமைதியான இடத்தில் பத்து நிமிடம் அமர்ந்து பிராணாயாமம் செய்யலாம். நடந்து கொண்டே படிக்கலாம். படித்ததை சொல்லிப் பார்க்கலாம்.

தேர்வு நெருங்கும் சமயத்தில் உணவை மாற்றுவது மற்றும் அதிக நேரம் விழித்திருப்பதைத் தவிர்க்கலாம். போதிய ஓய்வும், புத்துணர்ச்சியும் அவசியம் ஆகும்.

தேர்வுக்கு முன்னர் உடல் நலத்துக்கு எதிரான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். சாலையோர உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் மற்றும் ஜங்க் புட் தவிர்ப்பது நல்லது.

சிறு சிறு உடல் நலக்குறைபாடுகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளுங்கள்.

தேர்வுக்கு முதல் நாள் உங்களிடம் நீங்களே மனம் விட்டு பேசுங்கள். 'நான் நினைத்ததை சாதிக்கப் போகிறேன். படித்ததை நினைவில் கொண்டு வந்து மிக நன்றாக இந்தத் தேர்வை எழுதிப் போகிறேன்.' என உங்களது பாசிட்டிவ் எண்ணங்களையும், கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் உங்கள் மனதிடம் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.

தேர்வுக்கு தேவையான பொருட்களை முதல் நாளே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தேர்வு நேரத்தில் முன் அனுபவம் இல்லாதவர்களிடம் அறிவுரை கேட்பதைத் தவிர்க்கலாம். உங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால் கூட இப்போது உங்களால் அதிக மதிப்பெண் பெற முடியும் என்று நம்புங்கள்.

தேர்வு நேரத்தில் போக்குவரத்து சிரமங்களில் சிக்காமல் தப்பிக்க முன் கூட்டியே தேர்வு மையத்துக்கு வர திட்டமிடுங்கள்.

தேர்வு அறைக்கு செல்லும் முன்னர் மற்றவர்கள் படித்ததைப் பற்றி கலந்தாய்வு செய்ய வேண்டாம். கடைசி நிமிடத்தில் புதிய கேள்விகளை மனப்பாடம் செய்ய முயற்சிக்க வேண்டாம். புத்தகத்தில் இருந்துதானே கேட்கப் போகிறார்கள். என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

தேர்வு அறையில் கொடுக்கப்படும் வினாத்தாளை பொறுமையாக படித்து எது நன்றாகத் தெரியும், ஓரளவுக்கு பதில் தெரிந்த கேள்வி, கடினம் என பிரித்துக் கொள்ளவும். நன்றாகத் தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கவும். தெளிவாகவும், அழகாகவும் எழுதுதல் அவசியம். தெரியாத கேள்விகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தேர்வு முடிந்து வெளியில் வந்த பின்னர் வினாத்தாளுக்கு மதிப்பெண் போடுவது மற்றும் விடைகள் சரியா என சோதிப்பது போன்வற்றால் டென்சன் உருவாகும். எழுதி முடித்த தேர்வை எதுவுமே செய்ய முடியாது. அடுத்த தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

அனைத்து தேர்வகளும் முடிந்த பின்னர் எவ்வளவு மதிப்பெண் வரும் என்பதை கணக்கிட்டுப் பார்க்கலாம்.

தேர்வு நேரத்தில் மாணவர்கள் படித்ததை எழுதுவதற்கு மட்டுமே பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். படிக்கும் நேரத்தில் கவனத்தை சிதறவைக்கும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்.

எப்போதும் படி படி என டென்ஷன் படுத்த வேண்டாம். இவ்வளவு மதிப்பெண் வாங்கியே ஆக வேண்டும் என்று அவர்களை அச்சுறுத்துவதும் எதிர் விளைவையே ஏற்படுத்தும்

தேர்வு நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நட்பான சூழலை வீட்டில் உருவாக்குங்கள்.

தேர்வுக்கு செல்லும் முன் முழு இரவும் தூங்காமல் படிப்பதைத் தவிர்க்கவும். தேர்வுக்கு செல்லும் போதும், தேர்விக் போதும் அதிகளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். டென்சனை குறைப்பதற்காக சிலர் அதிகளவு தண்ணீர் குடிப்பதுண்டு. இதனால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற டென்சன் தேர்வு எழுதுவதை பாதிக்கும். தண்ணீர் குடிப்பதிலும் கவனம் தேவை.

முக்கியமாக கேள்வி என்று ஒரு சில கேள்விகைள மட்டும் படித்துவிட்டு, படித்தது வருமா? வராதா? என்று பூவா தலையா போட்டு யோசிக்க வேண்டாம்.

புத்தகத்தில் இருந்து எந்தக் கேள்வி கேட்டாலும் என்னால் எழுத முடியும் என்ற மனநிலை அவசியம். உங்களது படிப்பைக் கெடுக்கும் விஷயங்கள் எது என்று உங்களுக்கே தெரியும். அதன் பக்கம் போகாமல் இருங்கள். அது தொலைக்காட்சி, கிரிக்கெட், காதல், வீடியோகேம், செல்போன் என்று எதுவாகவும் இருக்கலாம். இப்படி உங்களிடம் இருக்கும் கெட்ட நண்பனைக் கண்டுபடித்து அவனை விட்டு தள்ளியிருப்பது நல்லது.

இன் எந்த டென்சன் வந்தாலும் அதனை தள்ளி நிற்கச் சொல்லி விட்டு உங்களால் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள முடியும். ஜெயிக்கவும் முடியும். வாழ்த்துக்கள்.

walgreens promo site free pharmacy discount cards
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

 • moon27

  பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்