SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணீருடன் விடைபெற்ற கோயில் யானைகள

2012-02-01@ 01:03:02

கூடலூர் :  புத்துணர்வு முகாம் நிறைவடைந்ததை தொடர்ந்து கோயில் யானைகள் தெப்பக்காட்டில் இருந்து தனது நண்பர்களை பிரியமுடியாமல் கண்ணீர் சிந்தின.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் கடந்த டிச. 14ம் தேதி கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது. இதில் 37 யானைகள் கலந்துகொண்டன. புத்துணர்வு முகாம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.

நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து அந்தந்த கோயில்களுக்கு அனுப்ப, யானைகளை லாரிகளில் ஏற்றும் பணி தொடங்கியது. அப்போது சில யானைகள் பிளிறியபடி லாரியில் ஏற அடம்பிடித்தன.  முதலில் திருச்சி திருவாடனை கோயில் யானை அகிலா லாரியில் ஏறியது. காலை 7 மணிக்குள் பெரும்பாலான யானைகள் லாரிகளில் ஏறி புறப்பட்டுவிட்டன.

காலை 3 மணி முதல் லாரியில் ஏற மறுத்து நெல்லை அழகிய நம்பி நாராயணன் கோயில் யானை குறுங்குடிவள்ளி காலை 9 மணி வரை அடம் பிடித்தது. இதனால் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு வன ஊழியர்கள், பாகன்கள் பெரும் பாடு பட்டு அவற்றை ஏற்றினர். ஒரு கட்டத்தில் யானை பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டது. கும்கி யானைகள் உதவியுடன் கோயில் யானையை லாரியில் ஏற்றினர். அதன் பிறகும் லாரியில் இருந்து குதித்து யானை தப்பி ஓடிவிட்டது.

இதை பிடிக்க பாகன்கள் முயன்றுவருகின்றனர். முகாமில், தென்காசி திருவிளங்குமரன் கோயில் யானை வள்ளி, திருச்செந்தூர் ரெட்டை திருப்பதி கோயில் யானை லட்சுமி ஆகிய இரண்டும் பாசமாக பழகி வந்தன. இவற்றை ஏற்ற 2 லாரிகளையும் அருகருகே கொண்டுவந்து நிறுத்தினர். அப்போது கண்ணீர் வடித்தவாறே லாரிகளில் ஏறிக்கொண்டன.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
why do husbands have affairs women cheat on men wife affair
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்