SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் புகாரில் திரைப்பட இயக்குனர் கைது பெண் புரோக்கரும் சிக்கினார்

2015-02-11@ 00:38:38

சென்னை : சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் செந்தமிழரசு. இவர், 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, சிபிசிஐடி போலீசார் மாறு வேடத் தில் களத்தில் இறங்கினர். செந்தமிழரசுவிடம் போனில் பேச்சு கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த செந்தமிழரசு “தன்னிடம் 14 வயது சிறுமி ஒருவர் உள்ளார். அவரிடம் உல்லாசமாக இருக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும். முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் முன் பணமாக தரவேண்டும். உல்லாசம் அனுபவித்த பிறகு மீதி பணத்தை கொடுத்தால் போதும்‘‘ என்றார்.

இதை தொடர்ந்து மாறு வேட போலீசாரும் பணம் கொடுக்க சம்மதித்தனர். போரூருக்கு வரும்படி செந்தமிழரசு அழைப்பு விடுத்தார். விரைந்து சென்ற போலீசார் செந்தமிழரசுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருக்கு துணை யாக இருந்த பாலியல் புரோக்கர் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி கைது செய்யப்பட்டார். கைது செய்யப் பட்டவர்களிடம் போ லீசார் விசாரணை நடத்தியபோது சிறுமியின் தாயும் பாலியலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
sms spy app phone monitoring software spy apps free
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்