பெண் ஊழியர் உடை மாற்றியதை படமெடுத்த இளைஞருக்கு 6 மாத சிறை: நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு

Date: 2015-02-03@ 11:55:29

துபாய்: பிலிப்பைன்ஸ் பெண் உடை மாற்றுவதை செல்போனால் படம் எடுத்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள  வணிக வளாகம் ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றிய வந்த 23 வயதான இந்திய இளைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு பணிபுரியும் பெண்  ஊழியரின் ஓய்வறைக்குள் சென்றுள்ளார்.

அந்த அறையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஊழியர் உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர், தனது செல்போனிலும்  படமெடுத்துள்ளார். தற்செயலாக திரும்பும் போது அவரைக் கண்ட பெண் கூச்சலிட்டதால், சகஊழியர்கள் திரண்டு அந்த இளைஞரை போலீசிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக துபாய் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்த இளைஞர் தன்னை மன்னித்து விடுதலை செய்யும்படியும்  கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று தீர்ப்பளித்த துபாய் நீதிமன்றம், குற்றவாளிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்த பின்  அந்த இளைஞர் துபாயை விட்டு  வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

sms spy app phone monitoring software spy apps free
prescription coupon card go viagra online coupon
venlafaxine forum mdwguide.com venlafaxine 150

Like Us on Facebook Dinkaran Daily News