குழந்தைபருவத்தில் ஆன்ட்ராய்டு போன், டேப்லட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் மூளை பாதிப்படையும்: ஆய்வில் தகவல்!

Date: 2015-02-03@ 11:09:50

ஐபாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்கும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் ஐபாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.

பாஸ்டன் பல்கலைகழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப்பருவத்தின் ஆரம்ப கட்டத்தில் வழக்கமான நட்புணர்வு மற்றும்  நண்பர்களுடனான விளையாட்டுகளை தவிர்த்து இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் மீதான அதீத பயன்பாடு உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை  தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாலும் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள், பொதுநலம், மனநலம் உள்ளவை பாதிக்கப்படும் என்பதும்  இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

rite aid load to card coupons centaurico.com rite aid store products
drug coupon card prescription coupons drug discount coupons

Like Us on Facebook Dinkaran Daily News