SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் உள்ள உலகின் மிகஉயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீப்பிடித்ததாக வெளியான வதந்தியால் பரபரப்பு!

2015-02-03@ 10:51:32

துபாய்: உலகின் உயரமான கட்டிடமும், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கட்டிடமுமான துபாயில்உள்ள  828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக விளங்கி வருகிறது. துபாயில் சுற்றுலா தளங்களில் புர்ஜ் கலீபா கோபுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்டிடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ பிடித்து விட்டதாக தகவல் பரவிதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த சம்பவத்தை போலீசாரும், அந்த கட்டிட நிர்வாகிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். புர்ஜ் கலீபா கட்டிடத்தில் பனிமூட்டம் காரணமாக புகை போன்று காணப்பட்டது. இதனை சிலர் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால், தீ பிடித்ததாக வதந்தி பரவியுள்ளதாக நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இதனை யாரும் நம்பவேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இது போன்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

drug coupon card prescription drugs coupons drug discount coupons

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27PEOPLEdeidINhigHWAYacc

    கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

  • PEGGYwhitsonASTRONAUT

    அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

  • RAM100yauliVECH

    ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

  • ooty_pugaiii

    ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

  • strike_governmenn

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்