வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு

Date: 2015-02-03@ 10:33:55

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.79 புள்ளிகள் உயர்ந்து 29,253.06 புள்ளிகளாக உள்ளது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 559.50 புள்ளிகள் குறைந்தது. எஃப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு, ஆட்டோமொபைல் மற்றும் வங்கித் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்துள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26 புள்ளிகள் அதிகரித்து 8,823.40 புள்ளிகளாக உள்ளது.

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.24% உயர்ந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.27% சரிந்து காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 1.14% உயர்ந்து முடிந்தது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.61.65 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க டாலரின் விற்பனை அதிகரித்துள்ளது, மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி வநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.61.80 காசுகளாக இருந்தது.

sms spy app phone monitoring software spy apps free
plavix plavix plavix plm
abilify and coke abilify maintena abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News