SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இசையெனும் இன்ப வெள்ளம்! - ரிலாக்ஸ் டைம்

2015-02-03@ 09:47:15

ரேப், ஜாஸ், கர்நாடிக், பியூசன், ஹிப் ஹாப் என பழக்குவியலுக்கு இடையில் நெகிழக் காத்திருக்கும் ஐஸ்கிரீமின் உச்சியில் தூவப்பட்டிருக்கும் நட்ஸ் உடன் மிக்ஸ் செய்து சுவைக்கச் சொல்லி வெரைட்டி விருந்து வைக்கிறது இசை. கிராம போனில் கேட்டது தான்...மார்கழிக் கச்சேரிகளில் குளிரக் குளிர செவியை நிறைத்த சங்கீதம் இப்போது உங்களது செல்போனில் அழைக்கும் போதெல்லாம் இசைக்க காத்திருக்கிறது. கையில் இருக்கும் ஐஸ்கிரீமை மறந்து அப்படியென்ன டென்சன் உங்களுக்கு.

நீனா பழகுவதற்கு இனிமையான பெண். இரண்டு குழந்தைகளின் தாய். குடும்பத் தலைவி பொறுப்பை எள் அளவும் குறையாமல் நிறைவேற்றும் நீனா குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் மட்டும் அடம் பிடிக்கும் குழந்தை. மகள் ஒரு மதிப்பெண் குறைந்தால் மூன்று நாட்களுக்கு கவலைப்படும் ரகம். மகளுக்கு வகுப்பு எடுக்கும் நேரங்களில் நீனாவின் டென்சன் எவ்வளவு கொடூரமாகவும் மாறிவிடும். அடிவாங்கிச் சிவந்த கன்னங்களும், அழுகையுமாக மகள் சுருண்டு விடும் போது நீனா தானும் அமர்ந்து அழுவாள். ஆனால் இதிலிருந்து நீனாவால் வெளியில் வர முடியாமல் மனநல ஆலோசகரைத் தேடிப் போனாள்.

நீனாவைப் போல் தான் நினைத்த மாதிரி எல்லாம் நடந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிரீடம் தலையின் கணத்தை கூட்டுகிறது. தனது எல்லைக் கோடுகளைத் தாண்டி நடக்கும் விஷயங்கள் டென்சன் கியரைப் போட்டு கோப வண்டியைக் கிளப்புகிறது. ராக்கெட் போல பறக்கும் மனம் எல்லா அஸ்திரங்களையும் தொலைத்து விட்டு கொலைவெறிக் கூத்தாடி எதிரில் இருக்கும் மனதைப் கீறிப் பிளந்து ரத்தம் குடித்த பின்பே அமைதியாகிறது.

ஒரு செயல் நடக்கிறது என்றால் அது உங்கள் ஒருவரால் மட்டுமே நிகழ்த்தப்படுவதில்லை. அல்லது உங்களது கட்டுப்பாட்டில் மட்டும் அது இல்லை என்ற உண்மை புரிந்து விட்டால் கோபப் பிசாசு கூலாகி விடும். பல காரணிகள் ஒரு செயலை பல்வெறு திசைகளில் இருந்தும் தாக்குகின்றன. இப்படி நடக்க வேண்டும் என ஆசைப்படுங்கள். நடக்காவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்பதற்கும் தயாராக இருங்கள். இப்போது பாருங்கள் எந்த விஷயம் மாற்றி நடந்தாலும் அது வில்லனாக மாறி உங்கள் நிம்மதியைக் குலைக்க முடியாது.

டென்சன் பற்றி மனம் சாம்பல் ஆன பின்னர் ரிலாக்ஸ் செய்து கொள்வது பற்றி யாராவது யோசிப்பார்களா. குட்டிச் செல்லங்களின் வகுப்பறைகள் முதல் பெற்றோரின் அலுவலங்கள் வரை எல்லாரும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழல்கிறோம். வேலைச் சூழலுக்கு இடையில் எளிய டெக்னிக்குகளை பயன்படுத்தி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். தொடர்ச்சியாக வேலை செய்வதாக இருந்தாலும் அந்த இடத்தில் இனிய இசை பரவட்டும். பிடித்த இசை தட்டுகள் மற்றும் இசை ஆல்பங்களை வாங்கி சேமித்து வைத்திருங்கள். டென்சனாக இருந்தால் அனைத்து வேலைகளையும் தூக்கிப் போட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விடுங்கள். இசையோடு இரண்டறக் கலந்து காணாமல் போக கற்றுக் கொள்ளுங்கள்.

எரிமலைக் குழம்பு மெல்லக் குளிர்ந்து மழை வெள்ளமாகி மனதில் பரவுவதை உணர முடியும். காலை அல்லது மாலை வீட்டில் இருக்கும் போது அல்லது பயணத்தில் இசையோடு இணைந்திருந்தால் காலை முதல் தேக்கிய அத்தனை டென்சனும் நல்ல பிள்ளையாய் விடை பெற்றுச் சென்று விடும். வழக்கமான உற்சாகத்துடன் அடுத்த நாளுக்கு வணக்கம் சொல்லி வரவேற்கலாம்.

plavix plavix 300 plavix plm
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2017

    28-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • konnorFRUITSHOW2017

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ள பழக்கண்காட்சி : சிறப்புப் படங்கள்

  • SQUIRELsmothiTONGUE

    வெயிலின் கடுமையால் சோர்வடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரில் நாக்கை நனைக்கும் அணில்

  • springFESTvlorDMURUG

    வசந்த விழாவின் நிறைவு நாளில் சிங்காரவேலர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்

  • 27-05-2017

    27-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்