கஸ்தூரிராஜாவுக்கு கைது வாரண்டு

Date: 2015-02-03@ 06:09:11

சென்னை: சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா. இவரிடம் இருந்து திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012ல் ரூ.65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றும், அவர் கொடுத்த காசோலைகள் வங்கியில் டெபாசிட் செய்தபோது, அவரது கணக்கில் பணமில்லை என்று திரும்ப வந்துவிட்டது என்றும் கூறி போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை, ஜார்ஜ் டவுன் விரைவு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 13ம் தேதி தள்ளி வைத்தார்.

watching my girlfriend cheat open my girlfriend cheated
drug coupon card prescription coupons drug discount coupons

Like Us on Facebook Dinkaran Daily News