SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணமான 2 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : கணவரிடம் போலீஸ் விசாரணை

2015-02-03@ 02:16:07

சேலையூர் : திருமணமான 2 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை அடுத்த போளுர் சோத்துகன்னி பகுதியை சேர்ந்தவர் குப்பம்மாள். இவரது மகள் நாகதேவி (24). எம்ஏ  பட்டதாரி. இவருக்கும் கார்த்திகேயன் (30) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. கார்த்திகேயன் சென்னை  பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னீஷியனாக வேலை பார்க்கிறார். சேலையூர் அருகே வேங்கைவாசல் கம்பர் தெருவில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். திருமணத்தின் போது நாகதேவிக்கு 5 சவரன் நகைகள் போட்டதாக கூறப்படுகிறது. இதனால், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தலை பொங்கலுக்கு மாமியார் வீட்டுக்கு மனைவியை அழைத்து சென்ற கார்த்திகேயன், அங்கிருந்து உடனடியாக சென்னை வந்து விட்டார். இதில் இரு குடும்பத்தினருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரியவர்கள் சமரசம் பேசியுள்ளனர். அதன் பின்னர், கடந்த 10 நாட்களுக்கு முன் நாகதேவியை, கார்த்திகேயன் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கார்த்திகேயன் வீடு திரும்பினார். கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் நாகதேவி கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நாகதேவி தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், குப்பம்மாள் போலீசில் புகார் செய்தார். அதில், வரதட்சணை கொடுமையால் தனது மகள் இறந்ததாக கூறியிருந்தார். இதுதொடர்பாக நாகதேவியின் கணவர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 2 மாதமே ஆவதால் தாம்பரம் ஆர்டிஓ  விசாரணையும் நடைபெறுகிறது

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sinemet megaedd.com sinemet
plavix plavix 300 plavix plm
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்