SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடபழனி பெருமாள் கோயில் கடை வாடகையை நிர்ணயிக்காத அறநிலையத்துறை

2015-02-03@ 02:14:16

சென்னை : வடபழனியில் உள்ள பழமைவாய்ந்த ஆதிமூல பெருமாள் கோயில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்து 2 மாதமாகியும் அங்குள்ள கடைகளுக்கான வாடகை இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால், கோயில் வளர்ச்சி பணி பாதிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வடபழனியில் 500 ஆண்டு பழமையான ஆதிமூல பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆதிமூல பெருமாள் சிலை, ஆதிமூல லட்சுமி சிலை, ஆண்டாள் சிலை, ஆழ்வார்களின் ஐம்பொன் சிலைகள் உள்ளன. கோயில் தனி நபர் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல், கோயில் மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 500 ஆண்டு பழமையான கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், ‘‘கோயிலை மீண்டும் வழிபாட்டுக்கு திறக்க முடியாது. இது எங்களின் சொத்து, அதை கோயிலாக பராமரிப்பதா அல்லது வேறு பணிக்கு பயன்படுத்துவதா என்று நாங்களே முடிவு செய்வோம்‘‘ என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், கோயிலின் சொத்துக்களை தனி நபரிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் முதல்வரின் தனி பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விரிவான செய்தி தினகரனில் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஓராண்டிற்கு மேலாக பூட்டப்பட்டிருந்த கோயிலை கையகப்படுத்திய அறநிலைய துறை பக்தர்கள் வழிபாட்டிற்காக கடந்த மாதம் திறந்துவிட்டது. இக்கோயிலுக்கு சொந்தமாக வடபழனி கோயில் தெருவில் 10 கடைகள் உள்ளன. கோயிலை கையகப்படுத்திய அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்யவில்லை. பொதுவாக, ஒவ்வொரு கோயிலின் வளர்ச்சி பணிகளும் அக்கோயிலின் சொத்துகளான வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வரும் வருமானத்திலேயே மேற்கொள்ளப்படும். ஆதிமூல பெருமாள் கோயிலுக்கு வாடகை இன்று வரை நிர்ணயிக்கப்படாததால் கோயிலின் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ‘‘500 ஆண்டு பழமைவாய்ந்த ஆதிமூல பெருமாள் கோயிலை கைப்பற்றி வழிபாட்டிற்காக பக்தர்களை அனுமதித்துள்ள இந்து அறநிலைய துறை கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகையை இன்று வரை நிர்ணயிக்கவில்லை. இதன் மூலம், தனியார் பயன் அடைந்து வருகின்றனர். இவ்வளவு ஏன், கோயில் கையகப்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில்தான் கோயில் இயங்குவதாக போர்டு வைக்கப்படவில்லை. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

sms spy app click spy apps free
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
coupons for cialis printable site free discount prescription cards
plavix plavix plavix plm

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27PEOPLEdeidINhigHWAYacc

  கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

 • PEGGYwhitsonASTRONAUT

  அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

 • RAM100yauliVECH

  ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

 • ooty_pugaiii

  ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

 • strike_governmenn

  அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்