SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆள் பற்றாக்குறையால் சமூகநலத்துறை முடங்கியது : ஊழியர்கள் குற்றச்சாட்டு

2015-02-03@ 02:09:51

சென்னை : சத்துணவுத்துறையில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையால் சமூகநலத்துறை இயக்குனரகம் செயல்படாத நிலையில் இருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 42 ஆயிரம் மையங்களில் 1.10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்கள் நாள்தோறும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மையங்களில் ஒரு சமையலாளர், உதவியாளர் மற்றும் அமைப்பாளர் ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் ஒரே அமைப்பாளர்கள் இரண்டு முதல் மூன்று மையங்களை கவனித்து வருகின்றனர். மேலும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக சத்துணவு ஊழியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுவரை அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில், உணவு தயார் செய்ய தேவையான மளிகை பொருட்கள் வாங்க அரசு வழங்கும் மானியத் தொகை குறைவாக உள்ளதால் பல மையங்களில் அமைப்பாளர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து பணம் செலவழிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, சென்னையில் உள்ள சமூகநலத்துறை இயக்குனரை நேற்று சந்தித்து அவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறியதாவது: ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை. அதிலும் தற்போது முதல்வர் மாற்றத்தால் சத்துணவு துறையில் எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. சமூகநலத்துறை இயக்குனர் அலுவலகம் செயல்படாத நிலையில் உள்ளது.

காலிப்பணியிட பிரச்னை குறித்து இயக்குனரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனு கொடுக்கும் போதெல்லாம் நடவடிக்கை எடுப்பதாக கூறும் அவர், அடுத்த சில நாட்களில் அதை மறந்து விடுகிறார். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இயக்குனருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் அதை மறுக்கிறார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதாக அரசு பெருமையாக கூறி வருகிறது.  அதற்கு தேவையான உதவியை செய்வதில் அரசு மிகுந்த அலட்சியம் காட்டுகிறது. பல மையங்களில் அமைப்பாளர்கள் தங்கள் பணத்தில் இருந்துதான் சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free
sms spy app phone monitoring software spy apps free
prescription coupon card viagra online coupon viagra online coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்