SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூசிலாந்திற்கு அனுப்புவதாக மோசடி எழும்பூர் நீதிமன்றத்திற்குள் பெண்கள் திடீர் மோதல்

2015-02-03@ 02:06:02

சென்னை :  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல் சங்க தேர்தல் முன் விரோதத்தில் வக்கீல் ஸ்டாலின் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மணலியைச் சேர்ந்த தமீம் (44) என்ற பெண் எழும்பூர் நீதிமன்றத்திற்கு நேற்று காலை வந்தார். அவருடன் மேலும் 10 பேர் வந்திருந்தனர். அப்போது அங்கு வேறு வழக்கில் சிக்கி ஜாமீன் பெற்ற சுமித்ரா (36) என்பவர் கையெழுத்து போட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். சுமித்ராவை பார்த்ததும் தமீம் ஆத்திரம் அடைந்தார். நேராக அவரிடம் சென்று “தனக்கு தர வேண்டிய பணத்தை ஏன்தரவில்லை. உன்னால் நான் அவமானத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. ஒழுங்காக பணத்தை திருப்பிக் கொடுத்துவிடு“ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமீமுக்கு ஆதரவாக வந்தவர்களும் சுமித்ராவை சூழ்ந்து கொண்டதால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 2 பெண்கள் ஆவேசமாக மோத தயாரானதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இருவரையும் தனித்தனியாக அழைத்து சென்றனர். இதுபற்றி தமீம் கூறியதாவது: முகப்பேரைச் சேர்ந்த சுமித்ரா 24 பேரிடம் நியூசிலாந்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தலா ஸீ1 லட்சத்து 80 லட்சம் பெற்றுக் கொண்டார். கமிஷன் தருவதாக கூறியதால் நியூசிலாந்து செல்ல விரும்புபவர்களை சுமித்ராவுக்கு அறிமுகம் செய்து பணம் வாங்கி கொடுத்தேன்.

ஆனால் அவர் உறுதி அளித்தபடி நியூசிலாந்துக்கு அனுப்பவில்லை. மாறாக 20 பேரை கனடாவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர்களுக்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர்களை எனது சொந்த செலவில் இந்தியாவுக்கு அழைத்து வந்தேன். அவர் நீதிமன்றத்திற்கு வருவதை அறிந்து பாதிக்கப்பட்ட நாங்கள் அவரை பிடித்து பணம் கேட்டோம். அனால் போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி விட்டனர்” என்று ஆவேசமாக கூறினார்.

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pORINgrainTAMIL

    கொட்டும் மழை, பனியிலும் பொங்கும் தமிழ் உணர்வு: ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் விடிய விடிய போராட்டம்

  • TnROCLKEd10LAKHppp

    மெரினாவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர் : தமிழகம் குலுங்கியது

  • 21-01-2017

    21-01-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afDSTADuimSTUDraileINformbull

    ஜல்லிக்கட்டு நடத்தகோரி புதுச்சேரி ஏஎப் டி மைதானத்தில் மாணவர்கள் காளை வடிவில் அணிவகுத்து நின்றனர்

  • CHILdreanSUPPORTAJAILKATTU

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்