மோடியின் 7 மாத ஆட்சியில் எந்த மாற்றமும் தெரியவில்லை

Date: 2015-02-03@ 01:27:14

புதுடெல்லி: மோடி  தலைமையில் பாஜ ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்களாகி விட்டது; ஆனால், பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த  ஆண்டிலாவது நல்ல மாற்றங்கள் ஏற்படும்; தொழில்துறைக்கு பலன் தரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று தொழில் நிறுவனங்கள் கருத்து  தெரிவித்துள்ளன.  தொழில் நிறுவனங்கள் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஒரு சர்வேயை, தொழில் நிறுவன கூட்டமைப்பு அசோசெம்  சமீபத்தில் எடுத்தது.  சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: ஐ சர்வேயில் பங்கேற்ற 54.2 சதவீதம் நிறுவனங்கள், மோடி ஆட்சி ஏற்பட்ட இந்த ஏழு  மாதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் தெரியவில்லை என்றனர்.
* ‘இப்படி இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்பட்டு தொழில்துறைக்கு பலன் கிடைக்கும்’ என்று இவர்கள் உட்பட  62.5 சதவீதம் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.
* உள்நாட்டு முதலீட்டு திட்டங்களில் அடுத்த இரண்டு மாதங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று 45.8 சதவீதம் நிறுவனங்கள் கூறின.
* ஏற்றுமதி சதவீதம் பெரிய அளவில் உயரவில்லை. பட்ஜெட்டுக்கு பின்னர் மாற்றம் தெரியலாம். * அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பன்னாட்டு, தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. *  வர்த்தகம் பெருக வாய்ப்புகள் உள்ளது. அடுத்த சில மாதங்களில் சந்தை விற்பனை, நிறுவன லாபம் அதிகரிக்கும் என்று 58.3 சதவீதம்  நிறுவனங்கள் கூறியுள்ளன.  இந்த சர்வேயை அசோசெம் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் எடுத்தது. ‘தொழில் நிறுவனங்களுக்கு இப்போது சற்று
அதிருப்தி இருந்தா லும், இன்னும் நம்பிக்கை போகவில்லை’ என்று இந்த சர்வே மூலம் தெரிவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke web-dev.dk abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News