SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசின் செயல்பாடுகளை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: அருண் ஜெட்லி

2015-02-03@ 01:23:38

புதுடெல்லி: அரசின் செயல்பாடுகளை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிப்பதில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய பங்காற்ற  வேண்டும் என நிதி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களிடம் சரியாக  சென்றடைவதில்லை என்ற கருத்து நிலவியது. இதற்காக பயிலரங்கம் ஒன்றுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் பத்திரிகை  தகவல் மையம் (பி.ஐ.பி) நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: அமைச்சரவையில் உள்ள அனைவரும் ஊடகங்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்  என்ற கலையை அறியாதவர்களாக இருக்கலாம். நாம் ஊடகங்கள் மூலமாகத்தான் மக்களை தொடர்பு கொள்கிறோம்.

ஊடகங்கள் மூலமாகத்தான் நாம் வாழ்கிறோம். அதனால் ஊடகங்களை பயன்படுத்தி கொள்ளும் திறமையை அமைச்சர்கள் மற்றும் அமைச்சகத்தில்  உள்ள உயர் அதிகாரிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க, இது  சம்பந்தமான தகவல்களை ஊடகங்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வேலை பிரசாரம் செய்வது அல்ல. அதற்காக உங்களுக்கு  பயிற்சி அளிக்கப்படவில்லை. அரசு உயர் அதிகாரிகள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. அதை நாங்கள் செய்யலாம். அரசின் செயல்பாடுகள் பற்றிய  தகவல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

அதைவிடுத்து அலுவலகத்துக்குள்ளேயே முடங்கி கிடந் தால் எந்த பயனும் இல்லை. உங்களைப் பற்றி வெளியுலகுக்கு எதுவும் தெரியாது.அரசின் செயல்பாடுகள் பற்றிய அதிகாரபூர்வ தகவல் களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதில் உயர் அதிகாரிகளும் முக்கிய பங்காற்ற  வேண்டும். சில சட்டரீதியான தடைகள் இருப்பதால், அரசு அதிகாரிகள் ஊடகங்களில் தங்கள் முகத்தை காட்ட முடியாது. ஆனாலும், அரசின்  செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் முக்கிய பங்காற்ற முடியும். அரசு அதிகாரிகள் அளிக்கும் தகவல்கள் சில நேரங்களில் டி.வி  விவாதத்தில் இடம் பெறாமல் போகலாம். ஆனால் அது பல ஊடகங்கள் மூலமாக மக்களை சென்றடையும்.

நாம் வெளிப்படையான சமூகத்தில் வசிக்கிறோம். அதனால் எந்த தகவல்களையும் மறைக்கத் தேவையில்லை. அரசின் செயல்பாடுகள் பற்றி சரியான  தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தால் அது மக்களை சென்றடைந்துவிடும். நீங்கள் எந்த பிரசாரமும் செய்ய தேவையில்லை. நீங்கள் அளிக்கும்  தகவல் தானாகவே மக்களிடம் பரவிவிடும். தற்போதுள்ள ஊடகங்கள் அரசின் முடிவை மட்டும் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதன்  பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை வெளியிடுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. சில சமயங்களில் அரசு அதிகாரிகள் தெரிவிக்கும்  நேர்மையான தகவல்கள், முரண்பாடாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தலாம்.

அதனால் அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தகவல்களை சொல்லும் விதம் தெளிவாக இருக்க வேண்டும்.
தற்போதுள்ள 24 மணி நேர செய்தி சேனல்களும், சமூக வலைதளங்களும் மீடியா உலகத்தையே மாற்றிவிட்டது. ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசும்,  இதர அமைப்புகளும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உண்மை சம்பவமோ அல்லது பொய் சம்பவமோ, தலைப்பு செய்தியாக இடம்  பெற்றுவிட்டால், மறுநாள் சட்டப் பேரவையே ஸ்தம்பிக்கலாம். அந்த செய்தி பொதுநல வழக்காக கூட மாறலாம். ஒரு அமைச்சர் அல்லது  அமைச்சகம் பற்றி எதிர்மறையான செய்தி வெளியாகி விட்டால், அதை சமாளிப்பதிலேயே அடுத்தநாளின் பெரும்பகுதி கழிந்துவிடும். இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sea_serppp

  பிலிப்பைன்ஸ் நாட்டில் கரை ஒதுங்கிய 30 அடி நீள ராட்சத கடல் பாம்பு

 • besat_hairyy1

  உடல் முழுவதும் உரோமங்களுடைய மர்மமான உயிரினம் ஒன்று பிலிப்பைன்ஸ் கரையோரம் கரை ஒதுங்கியது

 • maha_shivarathri11

  மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

 • jayalalitha_111

  69வது பிறந்த தினம் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

 • electric_train_111

  பரங்கிமலை-பழவந்தாங்கல் இடையே பயங்கரம் : மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 வாலிபர்கள் உடல் சிதறி பரிதாப பலி