கடிவாளம் தேவை
2015-02-03@ 01:20:49

இந்து பெண்கள் கட்டாயம் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தன்னுடைய கருத்தை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார் பாஜ முன்னணி தலைவர்களில் ஒருவரான சாத்வி ப்ராச்சி. இந்த முறை மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன். ‘நான் 4 குழந்தைகள் என்றுதான் கூறியிருக்கிறேன். 40 நாய் குட்டிகள் அல்ல’ என்று கொளுத்தி போட்டுள்ளார்.மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் பொறுப்பேற்ற பின்னர், வளர்ச்சி திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு, அவர்களுக்கு தொழில் துவங்க மானியத்துடன் கடன், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் வரவு வைப்பது, அன்னிய முதலீடுகளுக்கு பெருமளவு ஊக்குவிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
ஆனால் அவ்வப்போது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சர்ச்சைக்கிடமாக ஏதாவது பேசி பிரதமரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.
‘இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான். இதை ஏற்க மறுப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்’ என்றார் ஒரு தலைவர். ‘புதுடெல்லியில் யாருடைய ஆட்சி வேண்டும்? ராமரின் வாரிசுகளுடைய ஆட்சியா, அல்லது முறைகேடாக பிறந்த வாரிசுகளுடைய ஆட்சியா’ என்று மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் ஒருவர், பொதுக்கூட்டத்திலேயே பிரசாரம் செய்தார். தவிர, ‘நாட்டின் பெயர் பாரதம் என்பது சரியல்ல. இந்துஸ்தான் என்பதுதான் சரி’ என்றார் மற்றொரு தலைவர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் உள்ளிட்ட சொற்கள் இருக்க வேண்டுமா என்ற சர்ச்சை வேறு.
‘‘இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் உள்ளிட்ட வார்த்தைகளை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’’ என்று மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார். அவரது உறுதி இந்திய மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. சர்ச்சைக்குரிய வகையில் ஏதும் பேச வேண்டாம் என தனது கட்சியின் முன்னணி தலைவர்களிடம் பிரதமர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். கடிவாளம் தேவை தானே.
Tags:
Thalaiyangamமேலும் செய்திகள்
மக்கள் கொந்தளிப்பு!
என்கவுன்டர்
தேவை திடமான நடவடிக்கை
தகுமா அலட்சியம்?
கொடூர அலட்சியம்
கல்விக்கடனில் பாகுபாடு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்