விலை கடும் வீழ்ச்சி முட்டை உற்பத்தியை குறைக்க திட்டம்

Date: 2015-02-03@ 01:18:37

நாமக்கல்: முட்டை விலை கடுமையாக வீழ்ச்சி அடைவதால், உற்பத்தியை குறைக்க பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாமக்கல் மண்டலத்தில்,  கடந்த மாதம் ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 336 காசாக இருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு 14 முறை கூடி விலை நிர்ணயித்தது. ஜனவரி 31ம் தேதி ஒரு முட்டையின் விலை 275 காசாக இருந்தது. நேற்று மீண்டும் முட்டை  விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை விலை 265 காசு என ஒருங்கிணைப்பு குழு  நிர்ணயித்துள்ளது. தைப்பூசத்தை  காரணம் காட்டி முட்டை விற்பனை தமிழகத்தில் குறைந்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூறி வருகிறது.

இது தங்களுக்கு பெரும் பாதிப்பு எனக்கூறி உற்பத்தியை குறைக்க பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி  பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணி கூறியதாவது: ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 3 ரூபாய். பண்ணை  கொள்முதல்விலை தொடர்ந்து சரிவதால் முட்டை விற்பனை யில் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தின் முட்டை சந்தையை மற்ற மண்டலங்கள் பிடித்து  வருவதால் தமிழக முட்டை விற்பனை குறைகிறது  விலை வீழ்ச்சியை சரிசெய்ய முட்டை உற்பத்தியை பண்ணையாளர்கள் குறைக்க வேண்டும்.  முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையில் என்இசிசியின் நடவடிக்கை அமையவேண்டும்‘‘ என்றார்.

plavix tonydyson.co.uk plavix plm

Like Us on Facebook Dinkaran Daily News