SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சன் டிவி ஊழியர்களை காவலில் விசாரிக்க கோரும் மனு சட்டவிதிப்படி இல்லை சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

2015-02-03@ 01:12:32

சென்னை :  போலீஸ் காவல் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு சட்ட விதிப்படி தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், போலீஸ் காவல் கோரும் சிபிஐயின் பிரமாணப் பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. காவல் கோருவதற்கான தகவல்கள், சிபிஐ மனுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோருகிறோம் என்ற தகவல்களும் சிபிஐ மனுவில் இல்லை. எனவே, காவல் கோரும் சிபிஐயின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி மாலா கூறினார்.
சன் தொலைக்காட்சி ஊழியர்களை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரிய சிபிஐயின் அப்பீல் மனுவுக்கு, ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக வாதிட்டனர். காவல் கோரும் மனு நிறைய குறைபாடுகளுடன் இருப்பதால், அதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் வக்கீல்கள் குறிப்பிட்டனர்.

தொலைபேசி இணைப்புகளை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தவறாக பயன்படுத்தியதாக சிலர் திட்டமிட்டு தவறான வதந்திகளை பரப்பி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவரது உதவியாளர் கவுதமன் மற்றும் சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை சிபிஐ ஜனவரி 21ம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களை அடித்து, துன்புறுத்தி தங்களுக்கு சாதகமாக வாக்குமூலம் தரவேண்டும் என்று சிபிஐ மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கவுதமன், கண்ணன், ரவி ஆகியோரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சிபிஐ தரப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ண மூர்த்தி விசாரித்து, சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரிய மனுவை கடந்த மாதம் 24ம் தேதி தள்ளுபடி செய்தார். அப்போது சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘‘கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர். சிபிஐ தாக்கல் செய்த மனு முழுமை பெறாமல், ஒப்புதல் வாக்குமூலம் சரிபார்க்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. எனவே, சிபிஐ காவல் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், கவுதமன் உள்ளிட்ட 3 பேரையும் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு வாதிட்டார். அதற்கு சன் டிவி ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ரமேஷ், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி மாலா, சன் டிவி ஊழியர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அந்த தீர்ப்பில் நீதிபதி மாலா கூறியிருப்பதாவது: ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவல் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு சட்ட விதிப்படி தாக்கல் செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மூவரிடமும் கைது செய்வதற்கு முன்பும், கைது செய்த பிறகும் சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாரும் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலீஸ் காவல் கோரும் சிபிஐயின் பிரமாணப் பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை.
காவல் கோருவதற்கான தகவல்கள், சிபிஐ மனுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோருகிறோம் என்ற தகவல்களும் சிபிஐ மனுவில் இல்லை.  

வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதனால், காவல் விசாரணை தேவை என்பது மட்டுமே அவர்களது வாதமாக உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமெனில், முறையான அனுமதி பெற்று, சிறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை செய்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி மாலா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

காவல் கோருவதற்கான தகவல்கள், சிபிஐ மனுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோருகிறோம் என்ற தகவல்களும் சிபிஐ மனுவில் இல்லை.  - நீதிபதி மாலா

rite aid load to card coupons link rite aid store products
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-05-2017

    01-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2017

    30-04-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • iVGCSwarBOATDD

    கடற்படைக்கு சொந்தமான ஐசிஜிஎஸ் வாரட் என்ற கப்பல் பணியிலிருந்து விடுவிக்கும் விழா நடந்தது

  • hEAYtarffivINkoyemBEDU

    3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • 29-04-2017

    இன்றைய சிறப்பு படங்கள்