வட மாநிலங்களில் தனிப்படை முகாம் வங்கியில் 6000 பவுன் கொள்ளையில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

Date: 2015-02-03@ 01:01:10

வேப்பனஹள்ளி : கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கடந்த மாதம் 23ம் தேதி இரவு 6000 பவுன் நகைகள் கொள்ளை போனது. கொள்ளையர்களை பிடிக்க ஐ.ஜி சங்கர் உத்தரவின் பேரில், 10 தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்கு வங்கம், மகாராஷ்ரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று, அந்தந்த மாநில போலீசார் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக முகாமிட்டும், உள்ளூரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற வங்கி தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அருகில் உள்ள வீட்டிலேயே கட்டிட உரிமையாளர் வசித்து வந்துள் ளார்.

2 ஆண்டுக்கு முன்பு அவர் கிருஷ்ணகிரிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இதையடுத்து, பராமரிப்பிற்காக ஒரு பெண் மட்டுமே அங்கு தங்கியுள்ளார். அங்கிருந்து வேறு கட்டிடத்திற்கு வங்கியை மாற்றும்படி உயரதிகாரிகளுக்கு மேலாளர் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்புதான், வங்கி கட்டிட உரிமையாளரின் வீட்டில் தங்கியிருந்த பெண் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு, முதலாளியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக பணிப்பெண் சென்றிருப்பதை நோட்டமிட்டு, மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

sms spy app read spy apps free
why do husbands have affairs married men and affairs wife affair

Like Us on Facebook Dinkaran Daily News