கவுரவக்கொலை, வன்கொடுமை தமிழக போலீசார் தடுப்பதில்லை : கிருஷ்ணசாமி எம்எல்ஏ குற்றச்சாட்டு

Date: 2015-02-03@ 00:59:10

மதுரை : புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதிகளில் வன்கொடுமை அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க தமிழக காவல்துறை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்கொடுமைகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வன்கொடு மை குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் வேண்டும். அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கிய பணியிடங்கள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News