கூலி உயர்வுகோரி விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி போராட்டம்
2015-02-03@ 00:53:30

ஆண்டிபட்டி : புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தியதால் ஆண்டிபட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரத்தில் உள்ள 40 விசைத்தறிக்கூடங்களில் 800 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு காட்டன் மற்றும் ஏற்றுமதி ரக ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விசைத்தறி மற்றும் நூல் சுற்றுதல், பண்ணை ஏற்றுதல், வைண்டிங், சாயம் ஏற்றுதல், பாவு சுற்றுதல் உள்ளிட்ட தொழில்களில் 1,500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். கடந்த 2012ல் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் 2014, டிச. 31ம் தேதி முடிந்துவிட்டது. எனவே, புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு அனைத்து தொழிற்சங்கங்களும் விசைத்தறி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
புதிய கூலி ஒப்பந்தம் அமல்படுத்தாததை தொடர்ந்து, ஜன. 1ம் தேதி முதல் 50% கூலி உயர்வு, 20 சதவீத போனஸ், விசைத்தறி கூடங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து புதிய ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, சுப்புலாபுரத்தில் நேற்று காலை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்றனர். தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் சமரச பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
நெரிசலில் சிக்கி திணறும் நகர சாலைகள் முக்கிய வீதிகளில் இயங்கும் சன்டே மார்க்கெட்: அறிவிப்போடு நின்ற மாற்று இட திட்டம்
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ரூ.300 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளர்கள் வேதனை
பராமரிப்பில்லாத அரசு பஸ்களில் ஒழுகும் கூரைகள், மூட மறுக்கும் ஜன்னல்கள்: தொடர் மழையால் பயணிகள் அவஸ்தை பயணம்
பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு குழாய் மூலம் தண்ணீர்: நீண்ட கால திட்டம் நிறைவேறுமா?
ரூ.260 கோடியில் மின்வாரிய அணைகள் புனரமைப்பு ஆய்வு நடத்த உலக வங்கி குழு 6 நாட்கள் முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடை வயல் பட்டறைகளில் முடங்கி கிடக்கும் சின்ன வெங்காயம்: ஏலத்தில் விடப்படுமா?... விவசாயிகள் எதிர்பார்ப்பு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்