SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒபாமா தலாய் லாமா சந்திப்புக்கு சீனா எதிர்ப்பு

2015-02-03@ 00:53:27

பீஜிங்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வியாழன் அன்று ‘நேஷனல் பிரேயர் பிரேக்பாஸ்ட்’ கூட்டம் நடைபெறும். இதில் வெளிநாட்டு பிரபலங்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்தாண்டு இதில் புத்த மதத் தலைவர் தலாய் லாமா கலந்து கொள்கிறார். அவரை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கிறார். இந்த சந்திப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லி விடுத்துள்ள அறிக்கையில், திபெத் பிரச்னையை வைத்து சீனாவின் உள் விவகாரங்களில் எந்த நாடு தலையிட்டாலும் அதை சீனா எதிர்க்கும்.

தலாய் லாமாவுடன் எந்த நாட்டு தலைவர்கள் சந்தித்தாலும் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறியுள்ளார். சீன அரசின் பத்திரிகை தலையங்கத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பது, சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்கும் தலாய் லாமாவின் முயற்சியை அவர் ஏற்பது போன்றது என அது கூறியுள்ளது. சீனாவின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை, இரு தலைவர்களும் இதற்கு முன் 3 முறை சந்தித்துள்ளனர். இருவர் இடையே எந்த தனிப்பட்ட சந்திப்பும் நடைபெறவில்லை என கூறியுள்ளது.

sms spy app phone monitoring software spy apps free
watching my girlfriend cheat open my girlfriend cheated
plavix plavix plavix plm
abilify and coke abilify maintena abilify and coke
cialis cvs coupon cialis coupon cialis 20mg

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Like Us on Facebook Dinkaran Daily News
  • INTERATIONLAspavcecABBAGEINspace

    விண்வெளி ஆய்வகத்தில் செயற்கை முறையின் மூலமாக முட்டை கோஸ் பயிரிடப்பட்டு அறுவடை

  • 3dayrDOGSTUCKinwall

    3 நாட்கள் இரண்டு சுவர்கள் இடையே சிக்கியிருந்த நாய்க்குட்டி : மீட்டவுடன் வாலை ஆட்டி நன்றி சொன்னது

  • airbus_vegg

    சைவ உணவகமாக மாறிய ஏர்பஸ் விமானம் - வியக்கத்தக்க படங்கள்

  • zebra_11

    குட்டி வரிக்குதிரையை நீரில் மூழ்கடித்து கொல்ல முயலும் ஆண் வரிக்குதிரையிடம் இருந்து பாதுகாக்க போராடும் தாய்

  • 22-02-2017

    22-02-2017 இன்றைய சிறப்பு படங்கள்