வானூர் அருகே பரபரப்பு நகைக்காக கிணற்றில் தள்ளி 9ம் வகுப்பு மாணவி கொலை

2015-02-03@ 00:49:58

வானூர் : வானூர் அருகே நகை ஆசையால் மாணவி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மொளசூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி சசிரேகா, ஓமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவடி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சசிரேகா சடலமாக மிதந்தார். கிளியனூர் போலீசார் சடலத்தை மீட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சசிரேகா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சசிரேகா அணிந்திருந்த கம்மலுக்கு ஆசைப்பட்டு கிணற்றில் தள்ளி விட்டதாகவும், நீச்சல் தெரியாததால் கிணற்று நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிய சசிரேகா சத்தம் போட்டும், அதை காதில் வாங்காத அந்த மாணவி நகையுடன் தனது வீட்டுக்கு ஓடிவிட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் செயின் பறிப்பு சம்பவம் : பொதுமக்கள் பீதி... உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரத்தில் டிடிவி ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு: மர்மநபர்களை உடனே கைது செய்ய கோரிக்கை
தலைமை காவலர் மனைவியிடம் 8 சவரன் செயின் பறிப்பு
நாங்குநேரி அருகே இடப்பிரச்னையில் கணவன், மனைவி வெட்டிக்கொலை
வாணியம்பாடி நகராட்சியில் 55 கோடி கையாடல் முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் அதிரடி பணி நீக்கம்
திருச்சி அருகே பயங்கரம் பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை : கணவனுக்கு சரமாரி வெட்டு
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
15:57
நிர்மலா தேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை
15:52
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் வழங்க முடியாது: மத்திய அரசு பதில் மனு
15:50
மங்கோலிய பிரதமர் குரேல் சுக்-இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
15:35
சிறப்பு அம்சங்களை கொண்ட ரயில்-18 ஜூன் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது: செயலாளர் கே.என். பாபு
15:30
விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
15:29