SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா-அமெரிக்கா உறவால் சீனாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஒபாமா விளக்கம்

2015-02-03@ 00:48:15

வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு மேம்பட்டு வருவது, சீனாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது. சீனாவின் வளர்ச்சியையும்  நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தின  விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அதன்படி கடந்த மாத இறுதியில் அவர் மேற்கொண்ட 3 நாள்  பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு, அணுஆயுத ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவைத் தூண்டிவிட அமெரிக்கா முயல்வதாக சீனா கூறியது. அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு  பலியாகிவிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீன அரசு அறிவுரை கூறியது.

தனது இந்தியப் பயணத்தின்போது தனியார் தொலைக்காட்சிக்கு ஒபாமா பேட்டியளித்தார். அது தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பேட்டியில்  ஒபாமா கூறியுள்ளதாவது: எனது 3 நாள் இந்திய பயணத்தினால் சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டதாக வெளியான அறிக்கைகள் எனக்கு ஆச்சரியத்தை  ஏற்படுத்தின. அமெரிக்க மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் நட்புறவை பலப்படுத்தி வருகிறேன். இதில்  சீனா அச்சம் கொள்ள காரணம் எதுவுமில்லை. சீனாவில் அமைதி நிலவுவதையே நாங்களும் விரும்புகிறோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  சீனாவுக்கு பயணம் மேற்கொண்டேன். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அந்தப் பயணம் மிகவும்  வெற்றிகரமாக இருந்தது.

அதுபோலதான் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டேன். தற்போதைய காலகட்டத்தில் நாடுகள் இடையே நட்புறவு மேம்பட வேண்டும். அது இரு  நாடுகளுக்கும் சாதகமாக, நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும், உலக மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்பதே  எங்களுடைய விருப்பம். அமெரிக்க மக்கள் நலனுக்காகவே செயல்படுகிறேன். அதற்காக மற்றொரு நாட்டை அழித்துதான் அதை செய்ய வேண்டும்  என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. சீனாவின் வளர்ச்சியையும், அதன் அமைதியையும் அமெரிக்கா விரும்புகிறது.

இந்தியாவுடனான நட்புறவு இயற்கையானதாகும். இது தனிப்பட்ட முறையில் நான் மட்டுமல்ல, அனைத்து அமெரிக்க மக்களும் உணர்ந்துள்ளனர்.  சீனாவைவிட இந்தியாவை ஒருபடி மேலேதான் வைத்துள்ளோம். சீனாவும் தனது அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.  தென் சீனக் கடல் தொடர்பாக மலேசியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடனான பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண சீனா முன்வர வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.

abilify and coke web-dev.dk abilify and coke
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2017

    22-08-2017 இன்றயை சிறப்பு படங்கள்

  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்