SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாணியம்பாடி அருகே போர்வெல் அமைக்க கடன் கேட்டு வங்கியில் விவசாயிகள் முற்றுகை

2015-02-03@ 00:48:01

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே ஆழ்துளை கிணறு தோண்ட கடன் வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இவ்வங்கியில் வெள்ளக்குட்டை, நன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு மற்றும் நகைகளை அடகு வைத்துள்ளனர். மேலும் விவசாய கடன்களையும் பெற்றுள்ளனர். இந்த வங்கி தலைவராக நன்னேரி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், துணை தலைவராக ஆனந்தன் உட்பட 11 இயக்குனர்கள் உள்ளனர். வங்கி செயலாளராக வடிவேலு மற்றும் 7 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு மத்திய, மாநில அரசு சார்பில் விவசாய கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் ஸீ1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக 46 விவசாயிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவை கலெக்டர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உடனடியாக  கடன்  வழங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் 2 மாதமாகியும் வங்கி நிர்வாகம் எந்த பதிலும் கூறவில்லை. கடந்த மாதம் நடந்த வங்கி செயற்குழுவில் புதிய ஆழ்துளை கிணறு கடன் சம்பந்தமாக 24 பேருக்கு மட்டும் கடன் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு 6 இயக்குநர்கள் பரிந்துரை செய்து ள்ளனர். மற்ற 5 இயக்குநர்கள், வங்கி கடன் கேட்ட 46 பேருக்கும் கடன் வழங்குவதாக தீர்மானம் கொண்டு வந்தால் மட்டுமே கையெழுத்து போடுவோம் எனக்கூறி புறக்கணித்தனர். இதையறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். அப்போது வங்கிக்கு வந்த இயக்குனர் அன்பு, விவசாயி களை கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால் பொதுமக்கள், அன்புவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைவர் வெளியூர் சென்று உள்ளார். அவர் வந்த பின்னர் வரும் புதன் கிழமை இதுகுறித்து பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

sinemet go sinemet
plavix tonydyson.co.uk plavix plm
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2017

  26-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • aerospike_rocket

  செயற்கைக்கோள் ஏவுதல்களில் புரட்சியை உண்டாக்க இருக்கும் ஏரோஸ்பைக் ராக்கெட் - சோதனை ஓட்டத்திற்கு தயார்!

 • chanceller_angel_4

  ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் 4வது முறையாக ஆட்சியைப் பிடித்தார்

 • silentgarbadance

  நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அமைதி கர்பா நடனம்: காதில் ஹெட்போனை அணிந்து புதுவித கொண்டாட்டம்

 • hurricanemariyastorm

  மரியா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பழமையான அணை: நீர் வெளியேறுவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தீவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்