SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு குஜராத் அனுபவத்தை புகழ்ந்தார் ஜி

2015-02-03@ 00:46:15

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடன் குஜராத்  பயண அனுபவங்களை மறக்க முடியவில்லை என அவர் சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்தார். சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் லீயை சந்தித்து பேசினார்.  பனிலிங்க தரிசனம் செல்ல சிக்கிம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் 2வது பாதையை திறந்து விட பிரதமர் மோடியிடம், சீன  அதிபர் ஜி தனது இந்திய பயணத்தின் போது உறுதி அளித்திருந்தார். இது தொடர்பான ஒப்பந்தங்களை இரு நாடுகளும் நேற்று மாற்றிக் கொண்டன.  இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சுஷ்மா சுவராஜ்  நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் பேசிய ஜி ஜின்பிங் கூறியதாவது: நான் கடந்தாண்டு செப்டம்பரில் மேற்கொண்ட இந்தியப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய  தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனஇந்திய உறவுகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும். இருதரப்பு உறவில் இந்தாண்டு நல்ல முன்னேற்றம்  ஏற்படும் என நம்புகிறேன். எனது பயணத்தின் போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் நல்ல  ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியுடன் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மேற்கொண்ட பயணத்தையும், அவரது  விருந்தோம்பலையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி பிராணாப் முகர்ஜிக்கும் எனது வாழ்த்துக்களை  கூறுங்கள். இவ்வாறு ஜி ஜின்பிங் கூறினார்.


ரஷ்ய அமைச்சருடன் ஆலோசனை

ரஷ்யாஇந்தியாசீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முத்தரப்பு கூட்டம் பீஜிங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த  ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ, சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்து பேசினார். அப்போது வெளியுறவுத்துறை செயலர்  ஜெய்சங்கரும் உடன் இருந்தார். எரிசக்தி, தொழில்நுட்பம், பொருளாதார, உலக அமைதி ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது  தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
drug coupon card prescription coupons drug discount coupons

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2018

  23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaicmpalanysamy

  காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

 • LemonFestivalMenton

  பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

 • FloridaguncultureStudents

  புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 • KenyaElephants

  யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X