திருப்பத்தூர் அருகே அதிரடி சிறுமிகள் 2 பேருக்கு திருமணம் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

Date: 2015-02-03@ 00:46:05

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே நேற்று காலை நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம்,  திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் குழந்தை திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. தகவலின்படி திருப்பத்தூர் துணை தாசில்தார் பிரபுகணேஷ், வருவாய் ஆய்வாளர் முரளி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் மற்றும் கந்திலி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும், 16 வயது பெண்ணுக்கும், 25 வயது வாலிபருக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அதிகாரிகள், 18 வயது பூர்த்தியாகாமல் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என இருவீட்டாரையும் எச்சரித்து எழுதி வாங்கி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதேபோல் பெரியகரம் பாண்டியன் வட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 25 வாலிபருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள் இருவீட்டாரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். திடீரென திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உறவினர்கள், நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy

Like Us on Facebook Dinkaran Daily News