கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு செங்கல் சூளை அதிபர் கொலை மனைவி, காதலனுக்கு ஆயுள்

Date: 2015-02-03@ 00:42:56

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, எர்ரம்பட்டி தாடிக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கண்ணன் (34), சொந்தமாக சூளை வைத்து செங்கல் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மாதம்மாள் (25). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், மாதம்மாள் ஜீஞ்சம்பட்டியில் நடந்த திருவிழாவிற்கு சென்றபோது, கருபேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இது தெரிந்து லிங்கண்ணன் அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013 பிப்ரவரி 20ம் தேதி இரவு, மாதம்மாளும் சிவக்குமாரும் சேர்ந்து லிங்கண்ணனை கொலை செய்து உடலை வீட்டின் முன் குவித்து வைத்திருந்த மணலில் மறைத்து வைத்தனர்.  

இந்த கொலை குறித்து அப்போதைய போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து, மாதம்மாள் மற்றும் சிவக்குமாரை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கமலாவதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், லிங்கண்ணனை கொலை செய்து, அவரது உடலை மறைத்து வைத்த குற்றத்திற்காக சிவக்குமார் மற்றும் மாதம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், சிவக்குமாருக்கு ரூ.40 ஆயிரமும், மாதம்மாளுக்கு ரூ.30 ஆயிரமும் அபராதம் விதித்தார்.

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
sms spy app click spy apps free
why do husbands have affairs women cheat on men wife affair

Like Us on Facebook Dinkaran Daily News