ராணிப்பேட்டை சிப்காட்டில் 10 பேர் பலியான விபத்து குறித்து விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

Date: 2015-02-03@ 00:41:06

வேலூர் : வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் ராட்சத கழிவுநீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர் உயிரிழந்தனர்.
இந்த சுத்திகரிப்பு தொட்டியை பயன்படுத்த கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு எச்சரித்ததாகவும் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையிலேயே தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தோல்கழிவுகளின் சாலிடு (திடப்பொருள்) மட்டுமே சுத்திகரிப்பு தொட்டியில் கொட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அவற்றையும் மீறி ஸ்லர்ரீ (திரவப்பொருள்) கொட்டியதால், தொட்டி உடைந்து விபத்து ஏற்பட்டது.  சென்னையில் உள்ள மத்திய தோல் பொருள் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் சண்முகம் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.  

பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தோல் சுத்திகரிப்பு தொட்டியில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை ராணிப்பேட்டையில் தங்கியிருந்து சண்முகம் பார்வையிட்டு வந்தார். இந்நிலையில், அவர் நேற்று காலை அவசர, அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். ராணிப்பேட்டை சிப்காட்டில் நடந்த சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதால்,அவர் டெல்லிக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனிடையே அங்கு குவிந்து கிடக்கும் தோல் கழிவு பொருட்கள், கும்முடிப்பூண்டி திடப்பொருள் கழிவு மையத்திற்கு தினமும் 5 லாரிகள் வீதம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணி 40 நாட்களில் நிறைவடையும் என அத¤காரிகள் தெரிவித்தனர்.

plavix plavix plavix plm

Like Us on Facebook Dinkaran Daily News