SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைத்தேர்தலுக்காக ஸ்ரீரங்கத்தில் அமைச்சர்கள் முகாம் மாநில வளர்ச்சி பணிகள் முடங்கியது

2015-02-03@ 00:29:51

சென்னை : முதல்வர் தவிர அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு சென்று விட்டதால், தலைமை செயலகம் வெறிச்சோடியது. பல நாட்களாக ஒரே இடத்தில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளதால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் முடங்கி போய் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர், எம்எல்ஏ ஆகிய பதவிகளை இழந்தார். இதையடுத்து, அவர், போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசார பணிக்காக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர 28 அமைச்சர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். வழக்கமாக, அமைச்சர்கள் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்கள் சென்னையில் இருப்பார்கள். அமைச்சர்களை சந்திக்க வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தலைமை செயலகம் வருவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக ஒரு அமைச்சர் கூட சென்னையில் இல்லாததால், தலைமை செயலகத்திலும் பொதுமக்கள் வருகை குறைந்து, வெறிச்சோடி காணப்படுகிறது.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பார்வைக்காக பல்வேறு பைல்கள் காத்திருப்பதாகவும், இதனால் மக்கள் நலப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 13ம் தேதியும், 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதன்பிறகே அமைச்சர்கள் சென்னை வர வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் 4 மாதமாக தமிழக முதல்வராக உள்ளார். இந்த 125 நாட்களில் தமிழக மக்களுக்கு ஒரு புதிய திட்டங்கள் கூட அறிவிக்கப்படவில்லை. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முடிவடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியிலேயே துவங்கப்பட்ட ஒரகடம் மேம்பால பணி முடிந்து போக்குவரத்துக்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், மேம்பாலம் திறக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இதேபோன்று, பல அரசு கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளன. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படாமல் பணிகள் தொடர முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற மக்கள் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டும், தமிழக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் போதிய அக்கறை காட்டாமல் உள்ளனர். அவ்வப்போது துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நடத்தும் ஆய்வு கூட்டங்களும் இரண்டு வாரமாக நடைபெறவில்லை. இதுகுறித்து, தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் நடக்கும் அன்றாட பிரச்னைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க அமைச்சர்களுக்கு மேலிடம் அதிகாரம் வழங்கியுள்ளது. புதிய திட்டங் களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்கள் அறிவிக்கவும் அதிகாரம் இல்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வர் ஆனால் மட்டுமே சகஜ நிலை திரும்பும்‘‘ என்றார்.



watching my girlfriend cheat open my girlfriend cheated
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்