SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்ச் 9ம் தேதிக்குள் போலீஸ் நிலையங்களில் கேமரா : டிஜிபிக்கு ஐகோர்ட் கெடு

2015-02-03@ 00:28:17

சென்னை : கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு திட்டமிடப்பட்ட முதல் கட்டமான 251 காவல் நிலையங்களில் மார்ச் 9ம் தேதிக்குள் முழுவதுமாக பொருத்தும் பணியை முடிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு இதன் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஐ.பிரகாஷ் ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படுபவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகின்றனர். அவ்வாறு தாக்கப்படுபவர்கள் சில நேரங்களில் இறக்கவும் செய்கின்றனர். இதுபோன்று பல சம்பவங்கள் காவல் நிலையங்களில் நடைபெற்றுள்ளன.
இந்த சூழ்நிலையை கையாள்வதற்காக காவல் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தக் கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. தமிழகத்தில் உள்ள 1567 காவல் நிலையங்களிலும் பல கட்டங்களாக கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு அரசு முடிவு செய்தது. இதில் முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் 2013-14ஆம் ஆண்டுகளில் பொருத்துவதற்கு ரூ.1.75 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஆணை கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், 22 மாவடங்களில், இதுவரை 170 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 81 காவல் நிலையங்களில் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.

மீதம் உள்ள காவல் நிலையங்களில் பல கட்டங்களில் கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பல கட்டங்களாக பொருத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் பொருத்தும் பணி நடந்து வருவதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 170 காவல் நிலையங்களில் மட்டுமே பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. எனவே, முதல் கட்டமான 251 காவல் நிலையங்களிலும் கேமரா பொருத்தும் பணியை மார்ச் 9ம் தேதிக்குள் டிஜிபி பொருத்த வேண்டும். அதை நிறைவேற்றியதற்கான அறிக்கையை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்த கேமராக்கள் காவல் நிலையத்தின் உள்ளே பொருத்தப்படுகிறதா அல்லது காவல் நிலைய வளாகத்தில் பொருத்தப்படுகிறதா என்ற மனுதாரர் எழுப்பிய கேள்வியை தெளிவு படுத்தியும் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தனர்.

cialis cvs coupon cialis coupon cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்