SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாது மணல் முறைகேட்டில் ரூ.1 லட்சம் கோடி கொள்ளை : சிபிஐ விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2015-02-03@ 00:27:22

சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘‘தமிழகத்தில் நடக்கும் தாது மணல் கொள்ளை’’ பற்றி ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ள விரிவான கட்டுரையில் வி.வி.மினரல்ஸ் என்ற கம்பெனியின் தாது மணல் ஊழல் 1,00,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. அணுக்களைப் பிளக்க உதவும் கனிமப் பொருட்களில் ஒன்றான மோனோசைட் எடுக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், வைகுண்டராஜன் என்பவர் நடத்தும் வி.வி.மினரல்ஸ் கம்பெனிக்கு இந்த அனுமதியை மாநில அரசு வழங்கியுள்ளது. மோனோசைட் என்பது அணு உற்பத்திக்கு உதவும் முக்கிய கனிமப் பொருள். அது மட்டுமின்றி, மத்திய அணுசக்தி கழகத் தின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் இந்த மோனோசைட்டை தனியார் நிறுவனங்கள் கையாளக்கூடாது.

அணு ஆயுத தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த கனிமப் பொருளை வி.வி.மினரல்ஸ் கம்பெனி எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது மட்டுமின்றி, அவர்கள் அப்பொருளை ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதித்துள்ளது. பல சட்டங்களை மீறி பகற்கொள்ளை போல் நடக்கும் இந்த தாது மணல் கொள்ளை அரசு கஜானாவிற்கு வர வேண்டிய நிதியை தனியார் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறது. அத்துடன் இந்த தாது மணல் எடுப்பது அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டையும் விளைவிக்கிறது. இந்த தாது மணல் குவாரிகள் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், சிறுநீரக நோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ரூபாய் 1,00,000 கோடி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரிய கனிமப் பொருளை தனியார் எடுப்பதையும், அப்பொருட்களை அவர்களே ஏற்றுமதி செய்வதையும் மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சில கம்பெனிகளில் இந்த வி.வி.மினரல்ஸுக்கும் பங்குகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமான தாது மணல் கொள்ளை பற்றி விசாரித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள் ளார். தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பிய பிறகும்கூட இதுவரை மாநில அரசு அந்த அறிக்கை பற்றிய விவரங்களை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிட மறுக்கிறது. இந்நிலையில், அதிகார மையத்தில் உள்ளவர்கள் தாது மணல் கொள்ளை கூட்டத்தினருடன் உடந்தையாக இருப்பதே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு ஏற்ற காரணங்களாகும். இந்த ரூ.1,00,000 கோடி ஊழலில் தொடர்புடைய உண்மையான ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடித்து, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க, தாது மணல் கொள்ளை மற்றும் மோனோசைட் எடுப்பது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

abortion pill procedures farsettiarte.it having an abortion

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jayalalitha_111

    69வது பிறந்த தினம் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

  • electric_train_111

    பரங்கிமலை-பழவந்தாங்கல் இடையே பயங்கரம் : மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 வாலிபர்கள் உடல் சிதறி பரிதாப பலி

  • 24-02-2017

    24-02-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3000ghaotsCOMINGinlakekkk

    3,000 ஆடுகள் ஒரே நேரத்தில் உறைந்த திபெத்திய ஏரியை கடந்து செல்லும் கண்கவர் படங்கள்

  • californiacerlIONDROWNS

    தெற்கு கலிபோர்னியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்