மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் இலங்கையில் அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Date: 2015-02-03@ 00:26:21

சென்னை : சென்னை திநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தமிழகத்திலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் 65 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. தாயகம் திரும்புவதற்கும் அங்கு சென்று புது வாழ்வு தொடங்குவதற்கு அத்யாவசிய தேவைகளுக்கு தேவையான நிதி உதவியை மத்திய-மாநில அரசுகள் அவர்களுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News