SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கம் தேர்தல் செலவுக்காக மின்துறை அதிகாரிகளை மிரட்டி ரூ.30,000 வரை வசூல்

2015-02-03@ 00:23:08

சென்னை : ‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் செலவுக்காக மின்துறை அதிகாரிகளை மிரட்டி பணம் வசூல் செய்யப்படுவதாக’ தமிழக பாஜ தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்னும் 2 மாதத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்போம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜ தேர்தல் பொறுப்பாளராக பொது செயலாளர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கத்தில் நானும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளோம். கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். தேமுதிக தலைவர் பாஜ வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் கட்டாயம் எங்களுக்காக பிரசாரம் செய்வார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் விஜயகாந்த் இருக்கிறார்.

தேர்தல் ஆணையம் தேர்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டும். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 27 அமைச்சர்கள் குவிக்கப்பட்டு அதிகாரிகளை மிரட்டி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். தேர்தல் செலவுக்காக மின்துறையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் ரூ.10,000, ரூ.20,000, ரூ.30,000 கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மிரட்டி வருவதாக பேக்ஸ் மூலம் பொறியாளர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுபோல மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சரும் அதிகாரிகளை மிரட்டி பணம் வசூல் செய்து வருகிறார். தமிழகத்தில் அரசு இயந்திரம் செயல்படாமல், ஸ்ரீரங்கத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை முடித்து விட்டனர். முறைகேடு தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆணையம் நட வடிக்கை எடுக்காத பட்சத் தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.

டாஸ்மாக்கில் மட்டும் அதிமுக அரசு பாஸ்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சீரழிந்துள்ளது. டாஸ்மாக்கில் மட்டும்தான் அதிமுக அரசு பாஸ் செய்துள் ளது. மற்ற துறைகளில் அரசு பெயில்தான் ஆகியுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சியில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை வைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தமிழிசை கூறினார்.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
rite aid load to card coupons link rite aid store products
abilify and coke link abilify and coke


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2020

    20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்