அண்ணா நினைவுநாளையொட்டி 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு : தமிழக அரசு அறிவிப்பு

Date: 2015-02-03@ 00:21:41

சென்னை : அண்ணா நினைவுநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலைய துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் முக்கிய கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் அண்ணா நினைவு நாளன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் 309 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து இன்று நடைபெற உள்ளது.
 
சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபாலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். சென்னையிலும் மாநிலத்தின் பிற இடங்களிலும் கோயில்களில் நடைபெறும் அண்ணா நினைவு நாளை ஒட்டிய சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

sinemet megaedd.com sinemet
abilify and coke abilify maintena abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News