நரேந்திரமோடி இலங்கை வரும் போது தமிழர்கள் நலன் குறித்து பேசப்படும் : வேலாயுதம் பேட்டி

Date: 2015-02-03@ 00:19:48

சென்னை : இலங்கை அமைச்சர் வேலாயுதம் தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.  நேற்று அவர் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், அவர் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜ முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. சந்திப்புக்கு பின்னர், அமைச்சர் வேலாயுதம் அளித்த பேட்டி:

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முகாமில் வசித்து வரும் தமிழர்கள் அவர்களுடைய சொந்த இடத்தில் தங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை மலையக தமிழர்கள், தங்குவதற்கு வீடு கட்டி கொடுப்பதற்காக விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும் போது இலங்கை நலன் குறித்தும், தமிழர்கள் நலன் குறித்தும் பேசுவோம் என்றார்.

rite aid load to card coupons centaurico.com rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News