சென்னை-அகமதாபாத் புதிய ரயில் இயக்கப்பட்ட முதல்நாளே 6 மணி நேரம் தாமதம்

Date: 2015-02-03@ 00:16:37

சென்னை : சென்ட்ரல்- அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரயில் முதல்நாளே தாமதமாக சென்றது. சென்னை சென்ட்ரல்- அகமதாபாத் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என 2014ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய ரயில் பிப்.1ம் தேதி முதல் சென்ட்ரலில் இருந்தும், பிப்.4ம் தேதி முதல் அகமதாபாத்தில் இருந்தும் இயங்க தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதை தொடர்ந்து, பிப்.1ம் தேதி புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 31ம் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல்நாளே 90 சதவீத முன்பதிவு இடங்கள் தீர்ந்து விட்டன. அதனால் புதிய ரயிலில் பயணம் செய்வதற்காக பிப்.1ம் தேதியான நேற்று முன்தினம் இரவு முன்பதிவு செய்தவர்களும், சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய  வந்த ஏராளமானோரும் சென்ட்ரலில் காத்திருந்தனர். இரவு 8 மணிக்கு புறப்படும் என்று அறிவித்திருந்தாலும், 7.30 மணி வரை ரயில் எந்த நடைமேடைக்கும் வரவில்லை. அப்போது, இணை ரயில் தாமதமாக வருவதால் புதிய ரயில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ரயில் சென்னையில் இருந்துதான் புறப்படுகிறது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், புதிய ரயில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு சென்ட்ரல் வந்தது. இதன் காரணமாக, அன்றிரவு (1ம் தேதி) 8 மணிக்கு பதில் 2ம் தேதியான நேற்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, Ôசென்னை- அகமதாபாத் இடையிலான புதிய ரயில் சென்னையில் இருந்து பிப்.1ம் தேதி முதல் புறப்பட்டது. ஆனால், ஜன.31ம் தேதி காலை 10.07 மணிக்கு அகமதாபாத்தில் நடந்த விழாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதிய ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்துவிட்டார்.
அங்கு கால அட்டவணைப்படி காலை 9.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக விழா முடிந்தபிறகு புறப்பட்டுள்ளது. அறிமுக விழா சிறப்பு ரயிலாக புறப்பட்ட ரயில் கால அட்டவணைப்படி மாலை 5.05 மணிக்கு பதில் தாமதமாக வந்துச் சேர்ந்தது. அதனால் சென்னையில் இருந்தும் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதுÕ என்றார்.

abilify and coke link abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News