டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சு தோல்வி : காஸ் தட்டுப்பாடு அபாயம் அதிகரிப்பு

Date: 2015-02-03@ 00:10:48

சென்னை : புதிய வாடகை உயர்த்துவது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் சென்னையில் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் எரிவாயு வினியோகம் மேற்கொள்கின்றன. தென் மண்டல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் 3,250 டேங்கர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு லாரிகளுக்கு பணி வழங்குகிறது. ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் காலவதியானது. இதனால் புதிய ஒப்பந்தம் போடப்படுவது குறித்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. புதிய வாடகை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, எண்ணெய்  நிறுவனங்கள் அறிவித்துள்ள வாடகைக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் கேட்கும் வாடகைக்கும் கிலோ மீட்டருக்கு 12 காசுகள் வித்தியாசம் இருந்தது.

சென்னையில் கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைதொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, லாரிக ளில் காஸ் லோடு ஏற்றப்படவில்லை. இதனால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சமையல் காஸ் அத்தியாவசிய பொருள் என்பதால், இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசின் உணவு வழங்கல் துறை ஆணையர் தரப்பில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி முதற்கட்டமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை எழிலகம் வளாகம் ஐந்தாவது தளத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன், இந்தியன் எண்ணெய்  நிறுவன மார்க்கெட்டிங் பிரிவு செயல் இயக்குனர் மன்னூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, எண்ணெய்  நிறுவனம் தரப்பில் ‘வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களை சேர்ந்த லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை தான் வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், தென்மண்டலத்தில் மட்டும் லாரி உரிமையாளர் கூடுதலாக 12 பைசா வரை கேட்கின்றனர். இது குறித்து மும்பையில் உள்ள தலைமையிடத்தில் பேசுகிறோம். அதுவரை லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை விலக்கி கொண் டால் நல்லது. இப்பிரச்னை யில் பேச்சுவார்த்தை மூலமே உடன்பாடு எட்டமுடியும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து மாலை 3.50 மணியளவில், எல்பிஜி லாரி டேங்கர் உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான குழுவினருடன், கமிஷனர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கமிஷனர் தரப்பில் ‘எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி முடிவு செய்வதாக தென்மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு போராட்டத்தை விலக்கி கொண்டு, பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்’ என்று கூறினார். ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தரப்பில் ‘எண்ணெய்  நிறுவனங்கள் எங்களிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதன் பிறகு போராட் டத்தை விலக்குவது குறித்து முடிவு செய்கிறோம்’ என்று கூறினார்.

இதனை தொடர்ந்து சரியாக 5.30 மணியளவில் ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர், உணவு வழங்கல் துறை கமிஷனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது எண்ணெய்  நிறுவனம் தரப்பில் ‘மும்பையில் உள்ள தலைமையிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்படும். அதுவரை வாகனங்களை இயக்குமாறு தெரிவித்தனர். ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் தரப் பில் புதிய வாடகையை உயர்த்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று கூறிவெளியேறினார். தொடர்ந்து, கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அரசு தரப்பில் இருந்து உதவி செய்யப்படும். பொதுமக்கள் நலன்கருதி போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் தரப்பில் எண்ணெய்  நிறுவனங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமாக உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும், எங்களது உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து 7.30 மணியளவில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையா ளர் சங்க  தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறும் போது, ‘முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாமக்கலில் உறுப்பினர்களுடன் இன்று கலந்து பேசி முடிவு செய்வோம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். வாடகையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய்  நிறுவனங்களின் தென்மண்டல அதிகாரிகள், மும்பை தலைமையிடத்தில் பேசுவதாக தெரிவித்தனர். அதுவரை எங்களது போராட்டத்தை விலக்கி கொள்ளுமாறு தெரிவித்தனர். ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த வித சுமூக உடன்பாடும் எட்டவில்லை. அரசு தரப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இரு தரப்பினரும் சுமூகமாக பேசி முடிவுக்கு வாருங்கள் என்று கூறினர்’ என்றார்.

abilify and coke web-dev.dk abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News