அமெரிக்காவில் தற்செயலாக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்

Date: 2015-02-02@ 17:05:45

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஹோட்டலில் தம்பதிகள் தங்களின் 3 வயது மகன், 2 வயது மகளுடன் தங்கியுள்ளனர். அல்புகெர்கு நகரில் உள்ள அந்த ஹோட்டலில் தங்கியபோது சிறுவன் தனது தாயின் கைப்பையில் ஐ-பாடு எடுக்க சென்றான். ஆனால் கை துப்பாக்கியை பார்த்ததும் அதனை எடுத்து தற்செயலாக சுட்டதில் சிறுவனின் தந்தையின் இடுப்பில் பாய்ந்தது. மேலும் குண்டு அவரின் உடலை துளைத்து அருகில் இருந்த அவரின் மனைவியின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.

துப்பாக்கி குண்டு பாய்ந்த தாயார் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவனின் தந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
rite aid load to card coupons link rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News