ஜேம்ஸ் பால்க்னர் காயம்; ஆஸ்திரேலியா தவிப்பு

Date: 2015-02-02@ 16:34:19

பெர்த்: காயமடைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. பெர்த் நகரில் நேற்று நடந்த முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர், 24 பந்துகளில் 50 ரன்கள்  விளாசினார். மேலும், பந்து வீசிய போது தனது முதல் பந்திலேயே விக்கெட்டையும் வீழ்த்தினார். மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோரின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தந்தது என்று பரிசளிப்பு விழாவின் போது கேப்டன் பெய்லி இருவருக்கும் புகழாரம் சூட்டினார்.ஆனால், பால்க்னர்  தனது மூன்றாவது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது காயமடைந்தார். இதனால் அவர் பந்து வீச்சை கைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.

சொந்த நாட்டில் உலக கோப்பை கிரிக்கெட் துவங்குவதற்கு முன்னர் பால்க்னர் காயமடைந்துள்ளது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாக கருதப்ப டுகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் ஜேம்ஸ் பால்க்னர், ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக சிறப்பாக முடித்து  வைப்பவர் என்ற பெயரும் பெற்றவர். இதன் காரணமாக, காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் மைக் கேல் கிளார்க்கை கூட கண்டு கொள்ளாத கிரி க்கெட் ஆஸ்திரேலியா, பால்க்னர் காயமடைந்துள்ளதால் பெரும் கவலை அடைந்துள்ளது.

உலக கோப்பைக்கு முன்னர் அவர் காயத்திலிருந்து குணமடை ந்துவிடுவார் என்று ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பையில் பால்க்னர் விளையாட முடியாமல் போனால்,  அவருக்கு மாற்றாக மோயிசஸ் ஹென்ரிக்ஸ் அல்லது ஷான் மார்ஷ் ஆகியோரில் ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
i want to cheat on my husband i have cheated on my husband my husband cheated on me blog
sinemet megaedd.com sinemet

Like Us on Facebook Dinkaran Daily News