தென்மேற்கு பாகிஸ்தானில் ராக்கெட் தாக்குதலில் 2 போலீஸ்காரர் பலி

Date: 2015-02-02@ 14:39:09

குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் பிராந்தியத்தில் குடும்பத்தினருடன் சென்ற போலீஸ் அதிகாரி மீது தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பாதுகாப்புக்கு சென்ற 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என்று பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானின் தென்மேற்கே ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே மிகப்பெரிய பலுசிஸ்தான் பிராந்தியம் உள்ளது. இங்கு ஏராளமான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அத்துடன், இங்கு கனிமவளங்கள் உள்ளன.  இப்பிராந்தியத்தில் தலிபான் உள்ளிட்ட ஏராளமான தீவிரவாத இயக்கங்கள், அங்குள்ள மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அப்பகுதியை அமைதியற்ற நிலையில் வைத்திருக்கின்றனர். இந்நிலையில், குஸ்தார் மாவட்ட போலீஸ் அதிகாரி அஸ்கர் அலி யூசுப்சாய் கடந்த சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் குவாதார் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்கு 4 போலீசார் ஒரு காரில் உடன் சென்றனர்.

அப்போது குவாதார் நகருக்கு அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராக்கெட் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி யூசுப்சாய் உட்பட குடும்பத்தினர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்கள். எனினும், அவரது பாதுகாப்புக்கு சென்ற 2 போலீசார் பலியானார்கள். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று பலுசிஸ்தான் பிராந்திய உள்துறை செயலாளர் அக்பர் துர்ரானி நேற்றிரவு குவெட்டா நகரில் கூறினார். இதேபோல், பலுசிஸதான் பிராந்தியத்தில் தேராபக் நகரில் நேற்று காலை ஒரு வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

venlafaxine forum click venlafaxine 150

Like Us on Facebook Dinkaran Daily News