முதுகலை பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வானிலை அதிகாரி வேலை

Date: 2015-02-02@ 14:23:22

இந்திய விமானப்படையின் வானிலை பிரிவில் நிரந்தர பணிப்பிரிவு மற்றும் குறுகிய கால பணிப் பிரிவுகளில் சேர தகுதியான ஆண்கள்/ பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

Meteorlogy Branch

a) No. 198/16G/PC/M (ஆண்களுக்கானநிரந்தர பணிப்பிரிவு)

b) No.198/16G/SSC/M (ஆண்களுக்கான குறுகிய கால பணிப்பிரிவு)

c) No.198/ 16G/SSC/W (பெண்களுக்கான குறுகிய கால பணிப்பிரிவு)

வயது வரம்பு:


1.1.2016 தேதிப்படி 20 லிருந்து 26க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1990க்கும், 1.1.1996க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பி.எச்டி., படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 27. அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1988க்கும், 1.1.1995க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம்/ கணிதம்/ புள்ளியியல்/ புவியியல்/ கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ்/ சூழலியல் அறிவியல்/ பயன்பாட்டு இயற்பியல்/ கடலியல்/ வானியல்/ வேளாண்மை வானியல்/ புவி இயற்பியல்/ சூழல் உயிரியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு. (இளங்கலை பட்டப்படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்) இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி:

உயரம் - ஆண்களுக்கு 157.5 செ.மீ., பெண்களுக்கு 152 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை.

Permanent Commission பிரிவின் கீழ் பணி ஓய்வு பெறும் வயது வரை பணியாற்றலாம். Short Service Commission பிரிவின் கீழ் சேருபவர்களுக்கு முதலில் 10 ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதன் பின்னர் பணிதிறனை பொறுத்து மேலும் 4 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உளவியல் தேர்வு, குழுத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பத்தை www.careerairforce.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

POST BAG NO.001,
NIRMAN BHAWAN POST OFFICE,
NEWDELHI110106.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2015.

watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News