SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் பணியிடங்கள்

2015-02-02@ 14:20:18

இந்திய ஸ்டீல் ஆலையின் கீழ் செயல்படும் மேற்குவங்கம், பர்ன்பூரில் உள்ள ஈஸ்கோ ஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி:

ஆபரேட்டர் கம் டெக்னீசியன்:

219 இடங்கள் (எஸ்சி - 61, எஸ்டி - 16, ஒபிசி - 65, பொது - 77). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 31 இடங்களும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு வாரியாக காலியிடங்கள்:

மெட்டாலர்ஜி - 46, மெக்கானிக்கல் - 107, கெமிக்கல் - 10, எலக்ட்ரிக்கல் - 56. சம்பளம்: ரூ.16,800 - 3% - 24,110. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 28க்குள். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ. உடல் தகுதிகள்: உயரம்: ஆண்கள் - 155 செ.மீ., பெண்கள் - 143 செ.மீ. எடை: ஆண்கள் - 45 கிலோ. பெண்கள் - 35 கிலோ. மார்பளவு: ஆண்கள் - சாதாரண நிலையில் 75 செ.மீ., விரிவடைந்த நிலையில் - 79 செ.மீ., கண் பார்வை திறன்: 6/9 (கண்ணாடி அணியாமல்).

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.

சம்பளம்:

முதல் ஆண்டில் மாதம் ரூ.10,700 வீதமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.12,200 வீதமும் சம்பளமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்பவர்கள் எஸ் - 3 கிரேடு அந்தஸ்தில் ரூ.16,800 - 3% - 24,110 என்ற சம்பள விகிதத்தில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.250. பொது மற்றும் ஒபிசியினர் விண்ணப்ப கட்டணத்தை Burnpur IISCO Steel Plant, Power Jyoti Account No. 31932241266 என்ற கணக்கில் சேரும் வகையில் ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2015.

sms spy app read spy apps free
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indiaBLADEREMONCAL

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம்: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

  • cave_1_southh

    நீண்ட மண்டை ஓடு மற்றும் மூன்று விரல்களை கொண்ட விசித்திர மம்மி : குகையில் கண்டுபிடிப்பு

  • 29-06-2017

    29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்