டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை வாய்ப்பு

Date: 2015-02-02@ 14:16:45

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 'வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ்' நிறுவனத்தில் 465 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

1. Mining Sirdar/Short Firer, T - S Grade C:

438 இடங்கள் (பொது - 219, ஒபிசி - 119, எஸ்சி - 66, எஸ்டி - 34).

சம்பளம்:

ரூ.19,035 மற்றும் இதர படிகள்.

வயது:


18 முதல் 30க்குள்.

தகுதி:

Mining Sirdar தொழில் பிரிவில் சான்றிதழ் பயிற்சி அல்லது Mining - Mine Surveying பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ் படிப்பு, கேஸ் சான்றிதழ் படிப்பு. இந்த படிப்புகள் டிஜிஎம்எஸ் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. Surveyor (Min) T - S Grade B:

27 இடங்கள். (எஸ்சி - 4, எஸ்டி - 2, ஒபிசி - 7, பொது - 14).

சம்பளம்:


ரூ.20,552 மற்றும் இதர சலுகைகள்.

வயது:


18 முதல் 30க்குள்.

தகுதி:


10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வேயர் பாடத்தில் சான்றிதழ் படிப்பு அல்லது Mining - Mine Surveying பாடத்தில் டிப்ளமோ. இந்த படிப்புகள் டிஜிஎம்எஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது:

1.12.2014 தேதிப்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் சலுகை தரப்படும்.

விண்ணப்ப கட்டணம்:


ரூ.100. 'Western Coal fields Limited' என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடி எடுக்கவும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.westerncoal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (P/IR),
Western Coalfields Limited,
Coal Estates, Civil Lines,
NAGPUR 440 001.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.2.2015.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
walgreens promo read free pharmacy discount cards

Like Us on Facebook Dinkaran Daily News