SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎப் அலுவலகத்தில் 34 ஜூனியர் இன்ஜினியர் காலியிடங்கள்

2015-02-02@ 14:06:40

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எம்ப்ளாயீஸ் புராவிடண்ட் பண்ட் ஆபீஸ் மற்றும் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 34 ஜூனியர் இன்ஜினியர் (சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. ஜூனியர் இன்ஜினியர் (சிவில்):

22 இடங்கள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

இந்த 22 இடங்களில் டெல்லியில் 3 இடங்களும், அரியானா, இமாசல பிரதேசம், ஆந்திரா, கோவா, கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஒடிசா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், மகாராஷ்டிராவுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்):

12 இடங்கள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

இந்த 12 இடங்களில் ஆந்திரா, டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், நட்ரஸ் (புதுடெல்லி), புதுடெல்லி தலைமை அலுவலகம் ஆகியவற்றில் தலா ஒரு இடம் காலியாக உள்ளது.

தகுதி:


சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் பாடத்தில் டிப்ளமோ மற்றும் மத்திய, மாநில அரசுத் துறையில் மேற்கண்ட பணிகளுக்கு சமமான அந்தஸ்தில் ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 விகிதத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.epfindia.gov.in / www.epfindia.nic.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பத்தை ஏற்கனவே பணியாற்றும் அலுவலகங்கள் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Sh. Uday Baxi,
Regional Provident Fund Commissioner (HRM),
Bhavishya Nidhi Bhawan,
14, Bhikaiji Cama place,
NEWDELHI 110066.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
16.2.2015.

coupons for cialis printable read free discount prescription cards
plavix plavix plavix plm
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • children_protestt11

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

  • 2500_type_idlyy

    உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

  • 30-03-2017

    30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • FLIHJTarestre

    செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

  • farmersSUPPORtstuMAR

    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்