வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிவு

Date: 2015-02-02@ 11:05:49

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்து 29,046.95 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.90 புள்ளிகள் குறைந்து 8,781 புள்ளிகளாக உள்ளது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.65%, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.68% சரிந்து காணப்பட்டது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.61.95 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்தது, மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி வநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News